Skip to main content

சுனாமி பேரழிவை தத்ரூபமாக வரைந்து கின்னஸ் சாதனைக்கு முயற்சித்த நாகை இளைஞர்! 

Published on 30/12/2021 | Edited on 30/12/2021

 

நாகையில் 10 மணி நேரத்தில் 6857 சதுர அடியில் சுனாமி பேரழிவில் உயிரிழந்தவர்களின் நினைவுகளை ஓவியமாக வரைந்து கின்னஸ் சாதனை முயற்சியில் ஈடுபட்டவருக்கு பாராட்டுகள் குவிவிந்துவருகின்றன.

 

நாகை மாவட்டம், தலைஞாயிறு பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக்ராஜா. சிறுவயதிலிருந்தே ஓவியம் வரைவதில் தீராத ஈர்ப்பு கொண்டிருப்பவர். ஓவியத்தில் ஏதேனும் சாதிக்க வேண்டும் என்கிற விடாமுயற்சியில் வாய்ப்புக்காக காத்திருந்தார். இந்தநிலையில் நாகையில் உள்ள தனியார் கல்லூரியில் ஏற்பாடு செய்திருந்த வேர்ல்டு ரெக்கார்டு கின்னஸ் சாதனை முயற்சியில் ஈடுபட்ட கார்த்திக்ராஜா, 10 மணி நேரம் 17 நிமிடத்தில் மிக பெரிய ஓவியத்தை வரைந்தார். 6857 சதுர அடியில் வரையப்பட்ட அந்த ஓவியம் கடந்த 2004ஆம் ஆண்டு உலகையே உலுக்கிய சுனாமி பேரழிவு பாதிப்புகளை உனர்த்தும்விதமாக வரைந்து காட்டியுள்ளார்.


காகிதத்தை தரையில் ஒட்டி கருப்பு சாயங்களால் கார்த்திக்ராஜா தீட்டியுள்ள ஓவியம் சுனாமியின் போது அனுபவித்த சோகங்களை நினைவுக்கு எடுத்து வந்துள்ளதாகவே பார்வையாளர்கள் கூறுகின்றனர். சுனாமியில் உயிரிழந்தவர்களின் நினைவுகளை போற்றும் வகையில்தான் இந்த ஓவியம் வரைந்ததாகவும், கின்னஸ் உலக சாதனை முயற்சிக்கு ஊக்கமாக இருந்த நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்பு ராஜ், மற்றும் அரசு அதிகாரிகளுக்கு நன்றிகளையும் தெரிவித்துள்ளார் கார்த்திக்ராஜா, 


யார் உதவியும் இல்லாமல் தனியாளாக கின்னஸ் உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டு 10 மணி நேரத்தில் 6857 சதுரடியில் ஓவியம் தீட்டி அசத்தியுள்ள கார்த்திக் ராஜாவிற்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்