குழந்தைகளுக்கான உணவுப்பொருட்களைத் தயாரிக்கும் பன்னாட்டு நிறுவனமான நெஸ்லேயும் சர்ச்சையும் உடன்பிறந்தவை என்றே சொல்லலாம். தொடர்ச்சியாக அதன் தயாரிப்புகள் மீது அவ்வப்போது சர்வதேச அளவிலும், இந்திய அளவிலும் புகார்கள் எழுவதும், தடை செய்யப்படுவதும் தொடர் கதையாக இருக்கிறது. தற்போது, சர்வதேச விதிமுறைகளை மீறி ஆசிய, ஆப்பிரிக்க மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகள் பலவற்றில் விற்கப்படும் நெஸ்லே நிறுவனத்தின் பால் மற்றும் குழந்தைகளுக்கான உணவுப்பொருட்களில் சர்க்கரையைச் சேர்ப்பதாக, சுவிட்சர்லாந்தை சேர்ந்த "பப்ளிக் ஐ' என்ற புலனாய்வு அமைப்பு கண்டுபிடித்துள்ளது.

ff

இந்நிறுவனத்தின் பால் பொருட்கள் உள்பட குழந்தைகள் உணவுத் தயாரிப்புகளில், சர்க்கரை சேர்க்கப் படுவதில்லை 'No added Sugar' என்று குறிப்பிட்டுக்கொண்டே, அதிக அளவு சர்க்கரை மற்றும் தேன் சேர்க் கப்படுவதாகக் கண்டறிந்துள்ளது. குறிப்பாக இந்தியாவில் விற்பனை யாகும் 15 வகையான செரிலாக் உணவுப் பொருளில் 3 கிராம் அளவுக்கு சர்க்கரை சேர்க்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இப்படி சர்க்கரை சேர்ப்பது குழந்தை களின் உடல்நலனுக்கு தீங்கானதாகும். இந்த உணவுப்பொருட்களின் விற்பனைமூலமாக நெஸ்லே நிறுவனம், இந்தியாவில் மட்டும் கடந்த 2022ஆம் ஆண்டில் 20 ஆயிரம் கோடி அளவுக்கு வருவாய் ஈட்டியிருக்கிறது. உலக அளவில் இந்நிறுவனம் கடந்த 2022ஆம் ஆண்டில் 100 கோடி டாலர் அளவுக்கு லாபமீட்டியுள்ளது. இதேபோல் பிரேசி-ல் விற்பனையாகும் 6 வகையான தயாரிப்புகளில் 4 கிராம் அளவுக்கு சர்க்கரை சேர்க்கப்பட்டுள்ளது. எத்தியோப் பியாவில் 5 கிராம் அளவுக்கும், தாய்லாந்தில் 6 கிராம் அளவுக்கும், நைஜீரியாவில் 6.8 கிராம் அளவுக்கும், பி-ப்பைன்ஸில் 7.3 கிராம் அளவுக்கும் சர்க்கரை சேர்க்கப்பட்டுள்ளது. அதேவேளை, வளர்ந்த நாடுகளான இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் சர்க்கரை அளவு பூஜ்ஜிய மாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

குழந்தைகளுக்கான உணவுப் பொருட்களில் சர்க்கரை சேர்ப்பதால், இளம் வயதிலேயே உடல் பருமனும், பிற்காலத்தில் நாள்பட்ட நோய்களும் குழந்தைகளுக்கு ஏற்படுமென்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். "வளர்ந்த நாடுகளுக்கும், வளர்ந்துவரும் நாடு களுக்குமாக இரட்டை நிலைப்பாட்டில் நெஸ் லேயின் தயாரிப்புகள் விற்பனை செய்யப் படுவது மிகவும் அபாயகரமானது. உலகம் முழுவதும் இதன் தயாரிப்புகளில், 3 வயதுக்கும் குறைவான குழந்தைகளுக்கான தயாரிப்புகளில் சர்க்கரை சேர்க்கப்படுவதை நிறுத்த வேண்டும்'' என்கிறார் பப்ளிக் ஐ புலனாய்வு அமைப்பின் அக்ரிகல்ச்சர் & நியூட்ரிசன் நிபுணரான லாரென்ட் கேப்ரியேல்.

Advertisment

இவ்விவகாரம் குறித்து நெஸ்லே இந்தியாவின் நிர்வாக இயக்குநர் சுரேஷ் நாராயணன் கூறுகையில், "18 மாதங்களுக்கு குறைவான குழந்தைகளுக்கான உணவுப் பொருட்களின் தயாரிப்பில், உலகளாவிய அளவில் ஒரே ஃபார்முலா தான் கடைப்பிடிக்கப்படுகிறது. இதில் பாகுபாடு பார்ப்பதாகக் கூறப்படும் செய்தி உண்மைக்குப் புறம்பானது. இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் நிர்ணயித்த உச்ச வரம்பை விட நெஸ்லே இந்தியா நிறுவனத்தின் தயாரிப்பான செரிலாக்கில் சேர்க்கப்படும் சர்க்கரையின் அளவு மிகக் குறைவானதாகும்.

ssssssssssss

இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையமானது, 100 கிராம் உணவுப்பொருளில் 13.6 கிராம் அளவுக்கு சர்க்கரை சேர்க்க அனுமதிக்கிறது. நெஸ்லே தயாரிப்பில் 7.1 கிராம் அளவுக்கே சர்க்கரை சேர்க்கப்படு கிறது. இதுகுறித்து டப்பாவில் குறிப்பிட் டுள்ளோம். கடந்த ஐந்தாண்டுகளில் 30% அளவுக்கு சர்க்கரை அளவுகளைக் குறைத்து வந்துள் ளோம்'' என்று குறிப்பிட்டுள்ளார். இவ் விவகாரத்தில், உரிய விசாரணை நடத்த உணவு பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் ஆணையத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசின் நுகர்வோர் விவகாரத்துறை செயலாளர் நிதி காரே தெரிவித்துள்ளார்.

வளர்ந்துவரும் நாடுகளுக்காக இரட்டை நிலைப்பாடு வைத்திருப்பதாக நெஸ்லே நிறுவனம் மீது எழுப்பப்படும் குற்றச்சாட்டுகள் ஒன்றும் புதிதல்ல. தொடக்க காலத்தில் தாய்ப்பாலைவிட நெஸ்லே நிறுவனத்தின் குழந்தைகளுக்கான ஊட்டச்சத்துக்களே சிறந்தவை என்ற எண்ணத்தை விதைப்பதற்காக, வளர்ந்துவரும் நாடுகளான ஆப்ரிக்க, லத்தீன் அமெரிக்க, ஆசிய நாடுகளைக் குறிவைத்து, செவி-யர்போல் உடையணிந்த பெண்களின் மூலம் மார்க்கெட்டிங் செய்தது. இதன்மூலம், தாய்ப்பால் கொடுத்துவந்த பெண்கள் பலரும் அதி-ருந்து மாறியதால் அப்போதே நெஸ்லே தயாரிப்புகள் மீது சர்ச்சை எழுந் திருக்கிறது. அடுத்ததாக, அந்நிறுவனத்தை சேர்ந்த ஐவரி கோஸ்ட் கோகோ தோட்டங்களில், குழந்தைத் தொழிலாளர்களை அடிமைகளைப் போல் பயன்படுத்தியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. நெஸ்லே நிறுவனத்துக்கு சொந்தமான கோகோ தோட்டங்களில் 2014ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட விசாரணையில், 56 தொழிலாளர்கள் 18 வயதுக்கு குறைவானவர்கள் என்பது தெரியவந்து சர்ச்சையானது.

கடந்த 2015ஆம் ஆண்டில், நெஸ்லே நிறுவனத்தின் மேகி நூடுல்ஸ் தயாரிப்பில், அளவுக்கதிகமாக மோனோசோடியம் க்ளூட்ட மேட் சேர்க்கப்பட்டதாகக் கண்டறியப்பட்டு இந்தியாவெங்கும் பல மாநிலங்களில் மேகி நூடுல்ஸ் தடைசெய்யப்பட்டது. அதற்காக விளம்பரப் படத்தில் நடித்த அமிதாப் பச்சன், மாதுரி தீட்சித் உள்ளிட்டோர் மீதும் வழக்கு தொடுக்கப்பட்டது! பின்னர், நீதிமன்றம்வரை போராடி படிப்படியாக தடை நீக்கப்பட்டது. தற்போது மீண்டும் நெஸ்லே நிறுவனத் தயாரிப்புகள் சர்ச்சையில் சிக்கியுள்ளன!

-தெ.சு.கவுதமன்