Skip to main content

'உலகத்துல தாயை விடப் பெரிய சக்தி எதுவுமில்ல'- கிணற்றில் தொக்கி நின்ற பேருந்து!

Published on 14/05/2024 | Edited on 14/05/2024
'There is no greater power in the world than mother'-Bus parked in a well

திருச்சியில்  தனியார் பேருந்து ஒன்று தறிகெட்டு ஓடி விபத்துக்குள்ளான நிலையில் கிணற்றுக்கு அருகிலேயே மோதி நின்று படபடப்பை ஏற்படுத்தும் பகீர் காட்சிகள் வெளியாகியுள்ளது.

திருச்சிக்கு அருகே உள்ள பகுதியில் தனியார் சொகுசு பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகி சாலையிலிருந்து இறங்கி சாலையை ஒட்டியுள்ள கிணற்றில் அந்தரத்தில் நின்றது. இந்தக் காட்சி பெரும் பரபரப்பை  ஏற்படுத்தி இருக்கிறது. அந்தப் பேருந்தின் மேல் பகுதியில் 'உலகத்துல தாயை விட பெரிய சக்தி எதுவுமில்ல' என்ற வாசகம் எழுதப்பட்டிருக்கிறது. சமூக வலைத்தளத்தில் இந்த வீடியோவை பலரும் அதிகமாகப் பகிர்ந்து வருகின்றனர்.

சார்ந்த செய்திகள்

 

Next Story

இருசக்கர வாகனங்கள் மீது பேருந்து மோதி விபத்து; ஓட்டுநர் கைது!

Published on 13/06/2024 | Edited on 13/06/2024
salem dt sukkampatti village bus lorry two wheer incident

சேலம் மாவட்டம் வலசையூர் அருகே சுக்கம்பட்டி கிராமத்தில், அரசு மேல்நிலைப்பள்ளி எதிரில் நேற்று (12.06.2024) காலை சுமார் 10.40 மணியளவில் அரூரில் இருந்து சேலம் நோக்கி சென்ற லாரி ஒன்றின் பின்னால் இரண்டு இருசக்கர வாகனங்கள் சென்று கொண்டிருந்தன. அப்போது ஆச்சாங்குட்டப்பட்டியிலிருந்து சேலம் நோக்கி வந்துகொண்டிருந்த தனியார் பேருந்து எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனங்கள் மீது மோதி விபத்தில் சிக்கியது. இதில் இருசக்கர வாகனங்களில் பயணம் செய்த கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நில அளவையராக பணிபுரிந்து வந்த முருகன் (வயது 30) மற்றும் அவரது மனைவி நந்தினி (வயது 25) மற்றும் பூவனூரைச் சேர்ந்த வேதவள்ளி லட்சுமணன் ஆகிய மூவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும், இவ்விபத்தில், முருகன் மற்றும் நந்தினி தம்பதியரின் ஒரு வயதுக் குழந்தை கவின் பலத்த காயமடைந்து சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லும் வழியில் உயிரிழந்தது. இந்த விபத்தில் கர்ப்பிணிப் பெண் ஒருவர்,  இரண்டு குழந்தைகள் உட்பட 5 பேர் உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 

salem dt sukkampatti village bus lorry two wheer incident

வேகத்தடை இருப்பதால் மெதுவாகச் சென்ற லாரியின் பின்னால் வந்த இருசக்கர வாகனங்கள் மீது அதிவேகமாக வந்த பேருந்து மோதியது தெரியவந்தது. இந்நிலையில் இந்த சாலை விபத்தில் 5 பேர் உயிரிழந்த சம்பவத்தில் தனியார் பேருந்து ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். தலைமறைவாக இருந்த பேருந்தின் ஓட்டுநர் ரமேஷை வீராணம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

Next Story

''நிரூபித்துவிட்டால் நாளையே பாஜகவில் இருந்து போய் விடுகிறேன்'' - தமிழிசைக்குத் திருச்சி சூர்யா சவால்!

Published on 11/06/2024 | Edited on 11/06/2024
'I will leave BJP if I prove Tamilness' - Trichy Surya interview

'பாஜக மாநில தலைவர் குற்றப்பின்னணி உள்ளவர்களை எந்தச் சூழ்நிலையிலும் சேர்க்கவில்லை. இதை ஒருவேளை தமிழிசை நிரூபித்துவிட்டால் நான் பாஜகவில் இருந்து நாளையே போய் விடுகிறேன்' எனப் பாஜக நிர்வாகி திருச்சி சூர்யா தெரிவித்துள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக நிர்வாகி திருச்சி சூர்யா பேசுகையில், ''இருக்கும் மாண்பை முன்னாள் மாநில தலைவர் (தமிழிசை) காப்பாற்ற வேண்டும். பொது இடத்திற்கு போகும் போது தவறான விஷயங்களைப் பேச வேண்டாமே. சில விஷயங்களைச் சொல்வதற்கும் இடம் இருக்கிறது. இன்றைக்கு தனிப்பட்ட முறையில் தமிழிசை அக்கா எனக்கு மிகவும் நெருக்கமானவர். தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கும் தமிழிசை அக்காவுக்கும் பயங்கர போர் நடக்கும். அந்தச் சூழ்நிலையிலும் நான் திமுகவில் இருக்கும் பொழுது கூட என்னுடைய மகன் பிறந்தநாளுக்கு வந்துட்டு போனார்கள். அவர்கள் என் மீது மிகவும் பிரியம் கொண்டவர். ஆனால் கட்சி ரீதியாக பார்க்கும் போது அவர்களிடம் நெருக்கமாக இருந்தாலும், அவரை தலைவராக ஏற்று நான் பாஜகவிற்கு வரவில்லை.

யார் தலைவரோ அவருடன் உடன்பாடு, பிரியம், கட்டுப்பாடு இருக்க வேண்டும். திமுகவினர் சிலர் ஆட்டுக்கு பாஜக தலைவரின் புகைப்படத்தை மாட்டிவிட்டு அதை நடு ரோட்டில் வெட்டுகிறார்கள். அதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை என்பதற்கு தமிழிசை எங்காவது அதற்கு கண்டனம் தெரிவித்தார்களா? அவங்களை பரட்டை எனச் சொன்னது கோபம் வருகிறது. ஆனால் மாநில தலைவரின் புகைப்படத்தை ஆட்டின் கழுத்தில் மாட்டி அதே திமுக காரர்கள் நடுரோட்டில் வெட்டுவதற்கு தமிழிசை கண்டனம் தெரிவிச்சாரா? அதை எல்லாம் பேசாதவர்கள் இதை ஏன் பேச வேண்டும். உங்களுக்கு கருத்து இருந்தால் முன்னாள் மாநில தலைவர் என்ற கட்டுப்பாடுடன் கட்சித் தலைவருக்கு தெரியப்படுத்த வேண்டும். பாஜக மாநில தலைவர் குற்றப்பின்னணி உள்ளவர்களை எந்தச் சூழ்நிலையிலும் சேர்க்கவில்லை. இதை ஒருவேளை தமிழிசை நிரூபித்துவிட்டால் நான் பாஜகவில் இருந்து நாளையே போய் விடுகிறேன். ஒரு குற்றப்பின்னணியில் வருவோரை கட்சியில் சேர்த்தார்கள் என்று கணக்கு காட்ட வேண்டும். அந்த மாதிரி எதுவும் நடக்கவில்லை. அது நடந்தது முன்னாள் மாநில தலைவர்கள் இருந்த சூழ்நிலையில்தான்'' என்றார்.