mammooty to act in gautham menon direction

இயக்குநர் கௌதம் மேனன் சமீப காலமாக நடிப்பில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இதனிடையே இயக்கத்திலும் கவனம் செலுத்தி வந்த அவர், கடைசியாக ‘ஜோஷ்வா இமை போல காக்க’ என்ற படத்தை இயக்கியிருந்தார். இப்படம் கலவையான விமர்சனத்தையே பெற்றது. இவர் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள துருவ நட்சத்திரம் சில காரணங்களால் இன்னும் வெளியாகவில்லை.

Advertisment

இந்த நிலையில் கௌதம் மேனன் இயக்கும் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. மலையாளத்தில் மம்மூட்டியை வைத்து ஒரு படம் இயக்கவுள்ளதாகவும், கதாநாயகியாக நயன் தாரா நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் படம் இயக்கிய கௌதம் மேனன் இப்படம் மூலம் மலையளத்தில் அறிமுகமாகவுள்ளதாக மலையாள திரையுலகத்தில் பேசப்படுகிறது.

Advertisment

மம்மூட்டி கடைசியாக பிரமயுகம் படத்தில் நடித்திருந்தார். இப்படம் கடந்த பிப்ரவரி 15 ரிலீஸாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்போது டர்போ, பஸுக்கா உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் பஸுக்கா படத்தில் கௌதம் மேனனும் நடித்துள்ளார். இந்த நிலையில் கௌதம் மேன்னன் இயக்கத்தில் நடிப்பது உறுதியாகும் பட்சத்தில் முதல் முறையாக அவர் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். மேலும் இப்படம் மூலம் மீண்டும் நயன்தாராவோடு இணைந்து நடிக்கவுள்ளார். இதற்கு முன்பாக மூன்று படங்களில் இணைந்து நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.