Published on 08/10/2018 | Edited on 08/10/2018
சென்னை வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் தற்போது பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது,
அரபிக்கடலில் உள்ள லூபன் புயல் வலுப்பெற்றுள்ளது, வங்கக்கடலில் உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, மண்டலமாக மாறியுள்ளது. இது புயலாக வலுப்பெறவும் வாய்ப்பிருக்கிறது. இதனால் காற்றின் போக்கு மற்றும் ஈரப்பதத்தில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் வடகிழக்கு பருவமழை நிலவுவதற்கான சூழ்நிலை மாறியுள்ளது. அடுத்துவரும் 24மணி நேரத்தில் தமிழ்நாடு மற்றும் புதுவையின் அநேக இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். வட தமிழ்நாட்டின் ஒருசில இடங்களில் கனமழைக்கான வாய்ப்பிருக்கிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதியில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.
8ம் தேதி முதல் 10ம் தேதிவரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.