Skip to main content

 சிதம்பரத்தில் விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்!

Published on 24/01/2025 | Edited on 24/01/2025
Farmers struggle in Chidambaram

சிதம்பரம் காந்தி சிலை அருகே  விவசாயிகள் பல்வேறு கோரிக்கை வலியுறுத்திக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே குமராட்சி ஒன்றியம் வையூர், காட்டுக்கூடலூர், அகநல்லூர், வல்லம்படுகை ,வடக்கு மாங்குடி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் பங்கேற்றுக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பாண்டியன், பாக்யராஜ், சோமசுந்தரம், துறை, வசந்தன், செல்வகுமார் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றுக் கண்டன கோஷங்களை எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் சுற்று வட்டார விவசாயிகளுக்கு குருவை சாகுபடிக்கு சரியான முறையில் காப்பீட்டுத் தொகை வழங்காததை கண்டித்தும், பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு அறிவித்த நிவாரண கணக்கெடுப்பு முடிந்து பல நாட்கள் ஆகியும் நிவாரணம் வழங்காததை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

சார்ந்த செய்திகள்