Skip to main content

பிறந்தநாளில் இமான் எடுத்த முடிவு - ரசிகர்கள் பாராட்டு

Published on 24/01/2025 | Edited on 24/01/2025
imman donates organs

இசையமைப்பாளர் இமான் 100 படங்களுக்கு மேல் இசையமைத்து தனக்கென ஒரு தனி இடத்தை தமிழ் சினிமாவில் பிடித்திருக்கிறார். மேலும் தேசிய விருது வாங்கிய இவர் தற்போது 2கே லவ் ஸ்டோரி, வள்ளி மயில், சென்னை சிட்டி கேங்க்ஸ்டர்ஸ் உள்ளிட்ட சில படங்களை கைவசம் வைத்துள்ளார். 

இந்த நிலையில் இன்று பிறந்தநாள் காண்கிறார் இமான். இதையொட்டி அவருக்கு திரை பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். இதனிடையே தனது பிறந்தநாளை முன்னிட்டு உடல் உறுப்புகளை தானம் செய்துள்ளார் இமான். 

இதனை தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்த அவர், “சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் தமிழ்நாடு அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் கீழ் முழு உடல் உறுப்பு தானத்திற்காக என்னைப் பதிவு செய்து கொண்டேன்” என மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து இமானுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

சார்ந்த செய்திகள்