சென்னையில் போலியாக 43 லாஜிஸ்டிக் நிறுவனங்களை உருவாக்கி அதன் மூலம் கோடிக்கணக்கில் மோசடி செய்துள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சென்னையில் லாஜிஸ்டிக் நிறுவனங்கள் என்ற பெயரில் போலியாக 43 நிறுவனங்கள் உருவாக்கப்பட்டு இந்த நிறுவனங்களில்ஏற்றுமதி இறக்குமதி தொடர்பாக அவர்களை அணுகக்கூடிய வாடிக்கையாளர்களின் பொருட்களைக் கொண்டு செல்வதற்கு கன்டெய்னர்களை குறைந்த செலவில் புக் செய்து தருவதாக ஏமாற்றப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. பல்வேறு நிறுவனங்களில் கன்டெய்னர்களை புக் செய்து தருவதாக தெரிவித்து போலியான ரசீதுகளை அனுப்பி அதன் மூலம் பணத்தை பெற்று மோசடி செய்துள்ளது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இவர்களிடமிருந்து 150 சவரன் நகை, 58 லட்சம் ரூபாய் ரொக்கம், லேப்டாப், ஹார்ட் டிஸ்க், டிஜிட்டல் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த நான்கு பேர்களுக்கு பின்னால் இருக்கக்கூடிய நபர்கள் குறித்தும் விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.