Published on 16/04/2018 | Edited on 16/04/2018
மாலத்தீவு மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது, இந்த காற்றழுத்த தாழ்வுநிலையானது தொடர்ந்து மேற்கு நோக்கி நகர்ந்து நிலைகொண்டிருப்பதால் வடதமிழகம், தென் தமிழகம் மற்றும் புதுவையில் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் கன்னியாக்குமாரி,மதுரை மாவட்டம் சித்தாம்பட்டி, நீலகிரி மாவட்டம் கூடலூர் பாலம் போன்ற இடங்களில் தலா 5 சென்டிமீட்டர், மற்றும் சிவகாசி, கோவை மேட்டுப்பாளையத்தில் தலா 4 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.