Skip to main content

காருக்கு கண்கலங்கிய படி விடைக் கொடுத்த ஊழியர்கள்! 

Published on 21/07/2022 | Edited on 21/07/2022

 

Employees who responded to the car in a blink of an eye!

 

சென்னை ஃபோர்டு தொழிற்சாலையில் உருவாக்கப்பட்ட கடைசி காருக்கு கண்கலங்கியவாறு ஊழியர்கள் விடைக்கொடுத்தனர். 

 

சென்னையை அடுத்த மறைமலை நகரில் கடந்த 25 ஆண்டுகளாக ஃபோர்டு தொழிற்சாலை இயங்குகிறது. கடந்த 10 ஆண்டுகளாக இழப்பைச் சந்தித்து வருவதாகக் கூறி ஃபோர்டு தொழிற்சாலை வரும் ஜூலை மாதம் 31- ஆம் தேதி அன்றுடன் மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, ஃபோர்டு தொழிற்சாலையில் கார் உற்பத்தி முடிவடைந்தது. 

 

கடைசியாக, இந்த தொழிற்சாலையில் உருவாக்கப்பட்ட ஃபோர்டு காரை அலங்கரித்து கண்ணீர் மல்க ஊழியர்கள் விடை கொடுத்தனர்.    

 

சார்ந்த செய்திகள்

Next Story

காரும் - லாரியும் மோதி விபத்து; மாவட்ட கல்வி அதிகாரிக்கு நேர்ந்த சோகம்!

Published on 17/03/2024 | Edited on 17/03/2024
Car-Lorry Collision incident Tragedy happened to the district education officer

காரும் - மினி லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் மாவட்ட கல்வி அதிகாரி உள்பட இருவர் பலியான சம்பவம்  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே உள்ள பொம்மிநாயக்கன்பட்டி விளக்கு என்ற பகுதியில் கார் ஒன்று சென்று கொண்டிருந்துள்ளது. அதே சாலையில் மின் லாரி ஒன்றும் எதிர் திசையில் வந்துள்ளது. அப்போது எதிர்பாராத விதமாக காரும் - மினி லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் காரில் இருந்த தேனி மாவட்ட தனியார் பள்ளிகளுக்கான மாவட்ட கல்வி அதிகாரி சங்குமுத்தையா மற்றும் அவரது கார் ஓட்டுநரும் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர்.

இந்த விபத்தில் சிக்கிய மினி லாரி ஓட்டுநர் படுகாயங்களுடன் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். காரும் - மினி லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்தில் சிக்கி கல்வி அதிகாரி சங்குமுத்தையாவும், அவரது கார் ஓட்டுநரும் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

ஹரியானாவில் முன்னாள் எம்.எல்.ஏ. சுட்டுக்கொலை!

Published on 25/02/2024 | Edited on 25/02/2024
Former MLA in Haryana incident

ஹரியானாவில் இந்திய தேசிய லோக்தள் கட்சியின் தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான நஃபே சிங், பஹதுர்கர் என்ற இடத்தில் காரில் பயணித்த போது அங்கிருந்த மர்ம கும்பலால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். அவருடன் காரில் பயணித்த கட்சி நிர்வாகி ஜெய்கிஷன் என்பவரும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.  மேலும் இந்த துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த சம்பவம் ஹரியானாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து ஜஜ்ஜார் மாவட்ட எஸ்.பி. அர்பித் ஜெயின்  கூறுகையில், “இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து சி.ஐ.ஏ. மற்றும் எஸ்.டி.எஃப். குழுக்கள் விசாரணை நடத்தி வருகின்றன. குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள்” எனத் தெரிவித்தார். மேலும், இது பற்றி ஹரியானா உள்துறை அமைச்சர் அனில் விஜ் கூறுகையில், “இந்த விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். எஸ்.டி.எஃப். விசாரணையில் இறங்கியுள்ளது” எனத் தெரிவித்தார்.

பிரம்மா சக்தி சஞ்சீவனி மருத்துவமனை மருத்துவர் மணீஷ் ஷர்மா கூறுகையில், “துப்பாக்கிச் சூட்டில் சுடப்பட்ட நான்கு பேர் மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டனர். அவர்களில் முன்னாள் எம்.எல்.ஏ. நஃபே சிங் மற்றும் மற்றொரு நபர் ஜெய்கிஷன் ஆகிய இருவரும் அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு இருந்தனர். நாங்கள் சி.பி.ஆர். சிகிச்சை அளித்தோம். இருப்பினும் அவர்களைக் காப்பாற்ற முடியவில்லை. தோள்பட்டை, தொடை மற்றும் மார்பின் இடது பக்கம் ஆகிய இடங்களில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் மேலும் இருவர் ஐ.சி.யூ.வில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.

ஹரியானா மாநில ஆம் ஆத்மி தலைவர் சுஷில் குப்தா கூறுகையில், “ஹரியானாவில் சட்டம் மற்றும் ஒழுங்கு சீர் குலைந்து விட்டது. ஜஜ்ஜரில் இருந்து எங்களுக்கு தகவல் கிடைத்தது. . ஹரியானாவில் யாரும் பாதுகாப்பாக இல்லை. தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறிக்கிறார்கள், அரசியல்வாதிகள் சாலைகளில் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள். இங்கு அரசு சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுமா அல்லது முதல்வர் தொடர்ந்து தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடுவாரா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.