Skip to main content

உசிலம்பட்டியில் தெரிந்த எலான் மஸ்க்கின் செயற்கைக்கோள்கள்

Published on 29/10/2022 | Edited on 29/10/2022

 

Elon Musk's satellites seen in Usilampatti

 

பலதரப்பட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பின் ட்விட்டரை எலான் மஸ்க் 44 பில்லியன் டாலர்களுக்கு முழுமையாக வாங்கியுள்ளார். ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியதைத் தொடர்ந்து அந்நிறுவனத்தின் சிஇஒ பராக் அகர்வாலை பொறுப்பில் இருந்து நீக்கியுள்ளார். மேலும் அந்நிறுவனத்தின் சட்டத் துறை தலைவர் விஜயா கட்டே, பொது ஆலோசகர் சீன் எட்கல், தலைமை நிதி அதிகாரி நெட் சேகல் ஆகியோரையும் பதவியில் இருந்து நீக்கியுள்ளார்.

 

இந்நிலையில் மதுரை உசிலம்பட்டியில் வானத்தில் திடீரென வரிசையாக அமைந்த ஒளி போன்ற ஒன்று தோன்றியது. இதனை உடனே அப்பகுதி இளைஞர்கள் படம் பிடித்தனர். சிறிது நேரத்தில் அந்த ஒளி மறைந்து விட்டது. இதனை அடுத்து அதைக் குறித்து விசாரிக்கையில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங் செயற்கைக்கோள்களின் தொகுப்பாக இருக்கலாம் என்பது தெரியவந்தது. இதற்கு முன் செப்டெம்பர் 12ல் ஸ்டார்லிங் செயற்கைக்கோள்களின் தொகுப்பு உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்னோவில் வானில் தென்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அரசியல், சினிமா, விளையாட்டு யாரும் விதிவிலக்கல்ல; பாரபட்சமின்றி எலான் மஸ்க் நடவடிக்கை

Published on 21/04/2023 | Edited on 21/04/2023

 

Politics, cinema, sports are no exception; Elon Musk Action Without Discrimination

 

எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய பின் பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளார். ப்ளூ டிக் என்பது பிரபலங்களுக்கு மட்டும் வழங்கப்பட்டு வந்த நிலையில், உரிய பணத்தைக் கட்டி யார் வேண்டுமானாலும் ப்ளூ டிக் பெறலாம் எனும் முறையைக் கொண்டு வந்தார்.

 

மேலும் மாத சந்தா கட்டாதவர்களின் ப்ளூ டிக் பறிக்கப்படும் என்றும் ட்விட்டர் நிறுவனம் ஏற்கனவே தெரிவித்திருந்தது. இந்நிலையில் சில சினிமா பிரபலங்களுக்கு ப்ளூ டிக் பறிக்கப்பட்டது. இதன்படி, விஜய், தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, கார்த்தி உள்ளிட்டோரின் கணக்கில் இருந்து ப்ளூ டிக் நீக்கப்பட்டது. ஷங்கர், லோகேஷ் கனகராஜ், அட்லீ, செல்வராகவன் போன்றோரின் கணக்கில் இருந்தும் ப்ளூ டிக் நீக்கப்பட்டது.

 

அரசியல் தலைவர்களான முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உத்திரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால், ராகுல் காந்தி போன்றோரின் தனிப்பட்ட கணக்குகளின் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளது. விளையாட்டு பிரபலங்கள் சச்சின், தோனி, விராட் கோலி, ரோஹித் சர்மா போன்றோரின் ப்ளூ டிக் கணக்கில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இனி மாத சந்தாவாக ரூ.900 கட்டினால் மட்டுமே பிரபலங்களின் கணக்கு அதிகாரப்பூர்வமானது என்பதற்கான ப்ளூ டிக் வழங்கப்படும்.

 

 

Next Story

ட்விட்டர் நிறுவனத்தின் சி.இ.ஓ பதவியை வளர்ப்பு நாய்க்குக் கொடுத்த எலான்

Published on 15/02/2023 | Edited on 15/02/2023

 

Elan gave the position of CEO of Twitter to a pet dog

 

உலகின் நம்பர் ஒன் பணக்காரரும் டெஸ்லா கார் நிறுவனம் மற்றும் ஸ்பேஸ்-எக்ஸ் விண்வெளி ஆய்வு மைய நிறுவனருமான எலான் மஸ்க் உலகின் முன்னணி சமூக வலைத்தளமான ட்விட்டரை தன்வசப்படுத்திக் கொண்டார். ட்விட்டரை வாங்கியதும் அதில் ஏராளமான மாற்றத்தைச் செய்த எலான் தலைமை செயல் அதிகாரியாக இருந்த பராக் அகர்வால் உட்பட ஏராளமான ஊழியர்களை வேலையிலிருந்து அதிரடியாக நீக்கினார்.

 

இதனைத் தொடர்ந்து ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக (சிஇஒ) தான் இருக்க வேண்டுமா அல்ல விலக வேண்டுமா என்ற ஒரு வாக்கெடுப்பினை ட்விட்டரில் நடத்தியிருந்தார். அதில் 57 சதவிகிதம் பேர் எலான் தலைமை செயல் அதிகாரி பதவியிலிருந்து விலக வேண்டும் என வாக்களித்திருந்தனர். இதையடுத்து எலான் மஸ்க்,  “இந்தப் பதவிக்கேற்ற ஒரு முட்டாளைக் கண்டறிந்த பின், தலைமை செயல் அதிகாரி பதவியில் இருந்து நான் விலகிக் கொள்வேன். அதன் பின்பு மென்பொருள் மற்றும் சர்வர் குழுக்களுக்கு மட்டுமே தலைமை வகிப்பேன்” எனக் கூறியிருந்தார்.

 

Elan gave the position of CEO of Twitter to a pet dog

 

இந்த நிலையில் ட்விட்டர் நிறுவனத்தின் சி.இ.ஓ பதவி ஒரு நாய்க்குக் கொடுக்கப்பட்டுள்ளதாக எலான் மஸ்க் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் சி.இ.ஓ ஒன்று அச்சிடப்பட்டுள்ள டி- சர்ட்டுடன் அந்த நாய் கண்ணாடி அணிந்து தன் முன்பு ஆவணங்களுடன் அமர்ந்திருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். அது அவரது வளர்ப்பு வளர்ப்பு நாய் ஃப்ளோக்கி என்று கூறப்படுகிறது.