Published on 04/07/2021 | Edited on 04/07/2021
![E-pass system canceled to go to Kodaikanal!](http://image.nakkheeran.in/cdn/farfuture/zsnf5YviAVTtD-PCW3BRJfoSMjEZH9uu1I-Jrf-HMgg/1625364917/sites/default/files/inline-images/kodai_2.jpg)
தமிழகத்தில் கரோனா இரண்டாம் அலை காரணமாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூலை 12-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்னதாக மாவட்டங்கள் வகை 1, 2, 3 என மூன்று வகைகளாக பிரிக்கப்பட்டு தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்பொழுது இந்தமுறை அனைத்து மாவட்டத்திற்கும் ஒரே அளவில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தொடர்ந்து தொற்றுகள் குறைந்து வருவதால் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. அதன்படி இ-பாஸ் முறை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் செல்ல அனுமதி இ-பாஸ் ரத்து செய்யப்பட்டதால் சுற்றுலாத் தலங்களை திறக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. கொடைக்கானல் பிரையண்ட் பூங்கா, செட்டியார் பூங்கா, ரோஜா பூங்காவை திறக்க தோட்டக்கலை துறையினர் ஏற்பாடு செய்து வருகின்றனர்.