Skip to main content

அதிமுக எம்.எல்.ஏ. வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை!

Published on 25/02/2025 | Edited on 25/02/2025

 

dvac raid ADMK MLa house

அதிமுக எம்.எல்.ஏ. வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டு வரும் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை வடக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் அம்மன் அர்ஜுனன். அதிமுகவைச் சேர்ந்த  இவர் மீது வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக ஏற்கனவே வழக்கு  நிலுவையில் இருக்கிறது. இது தொடர்பான வழக்கைக் கோவை மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் டி.எஸ்.பி. தலைமையிலான 5 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் இந்த வழக்கு தொடர்பாக இன்று (25.02.2025) அவரது வீட்டில் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சோதனைக்கு பிறகே அவரது வீட்டில் இருந்து ஆவணங்கள், நகைகள் போன்ற ஏதேனும் பறிமுதல் செய்யப்பட்டனவா? என்ற முழு விவரங்கள் தெரியவரும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. 

சார்ந்த செய்திகள்