Skip to main content

விஸ்வகர்மா திட்டத்தை எதிர்த்து செப்டம்பர் 6 இல்  திராவிடர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம்

Published on 29/08/2023 | Edited on 29/08/2023

 

Dravidar Kazhagam on September 6 against the Vishwakarma scheme

 

பிரதமர் மோடி சுதந்திர தின விழாவில் உரையாற்றும் போது கைவினை தொழில்களைச் செய்பவர்களுக்கு ஊக்கம் அளிப்பதற்காக விஸ்வகர்மா யோஜனா  என்ற திட்டம் தொடங்கப்படுவதாக கூறினார். இதனை தொடர்ந்து மத்திய அரசு இத்திட்டத்திற்காக  13 ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது.

 

இந்நிலையில் விஸ்வகர்மா யோஜனா என்ற பெயரில் மத்திய அரசு கொண்டு வரும் குலக்கல்வித் திட்டத்தைக் கண்டிக்கும் வகையிலும், எதிர்க்கும் வகையிலும் வரும் செப்டம்பர் 6 ஆம் தேதி சென்னையில் அனைத்துக் கட்சித் தலைவர்களும் பங்கேற்கும் மாபெரும் மக்கள் திரள் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்துவது என்று திராவிடர் கழகம் சார்பில் சென்னை பெரியார் திடலில் இன்று (29.8.2023) நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

 

இந்த கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்.பி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி.,  உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். 

 

 

சார்ந்த செய்திகள்