Published on 01/09/2018 | Edited on 01/09/2018

அமெரிக்காவில் சிகிச்சை முடிந்து கடந்த வாரம் சென்னை திரும்பினார் தேமுதிக தலைவர் விஜயகாந்த். அவர் மீண்டும் மேல் சிகிச்சைக்காக 6 மாதங்கள் கழித்து அமெரிக்கா செல்வதாக இருந்தது. இந்நிலையில் நேற்று இரவு விஜயகாந்த் சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து சமூக வலைத்தளங்களில் பல்வேறு தகவல்கள் பரவின. உடனே, தேமுதிக தலைமைக்கழகம், விஜயகாந்த் நலமுடன் இருக்கிறார். வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று அவசர அறிக்கை வெளியிட்டது.
இந்நிலையில், விஜயகாந்த் குறித்த வதந்தியை நம்ப வேண்டாம் என்று தேமுதிக துணை செயலாளர் சுதீஷ் தெரிவித்துள்ளார்.