Skip to main content

வேன் கவிழ்ந்து விபத்து ஒருவர் பலி! 11 பேருக்கு காயம்! 

Published on 02/05/2022 | Edited on 02/05/2022

 

One passed away in van crash 11 injured!

 

திருச்சி மாவட்டம், மணப்பாறை கண்ணுடையான்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபாகரன்(26). இவர், கடந்த 30ம் தேதி காலை 07 மணிக்கு தனது வீட்டில் உள்ள பனை மரத்தில் ஏறியபோது மேலிருந்து தவறி கீழே விழுந்தார். அவரை மீட்டு அக்கிராமத்தினர் மணப்பாறையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.


இந்நிலையில் பிரபாகரனை பார்ப்பதற்காக நேற்று இரவு பிரபாகரனின் உறவினர்கள் 12 பேர் கண்ணுடையான்பட்டி கிராமத்தில் இருந்து சக்திவேல் (29) என்பவருக்கு சொந்தமான வேனில் புறப்பட்டு சென்றனர். கண்ணுடையான்பட்டி கிராமத்திலிருந்து திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் க.பெரியபட்டி பிரிவு அருகே அதிவேகமாக சென்றதில் திடீரென்று பிரேக் அடித்ததில் சாலையின் நடுவில் உள்ள சென்டர் மீடியனில் மோதி அந்த வேன் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது.


இதில் பிருந்தா(25) என்ற பெண் சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார். மற்ற 11 பேர் காயங்களுடன் மணப்பாறையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்றுவருகின்றனர். இதில் இரண்டு பெண்கள் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்