Skip to main content

வராத திமுக உறுப்பினர்கள்! ஒத்திவைக்கப்பட்ட தேர்தல்! 

Published on 26/03/2022 | Edited on 26/03/2022

 

DMK members not coming! Postponed election!

 

திருச்சி மாவட்டம், தொட்டியம் பேரூராட்சியில் துணைத் தலைவர் பதவி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. இதில் திமுகவைச் சேர்ந்த ராஜேஷ் என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் நின்று வெற்றி பெற்ற திமுகவினர் தங்கள் பதவியை ராஜினாமா செய்ய உத்தரவிட்டார்.

 

இதையடுத்து திமுக கவுன்சிலர் ராஜேஷ், தனது துணைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் இன்று துணைத்தலைவர் பதவிக்கு காலை 9.30 மணிக்கு தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இன்று திமுகவைச் சேர்ந்த  பேரூராட்சி தலைவரைத் தவிர மற்ற 9 திமுக வார்டு உறுப்பினர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை. அதிமுக உறுப்பினர்கள் ஐயப்பன், ராஜேந்திரன், சோபனா மற்றும் சிபிஎம் உறுப்பினர் கலைச்செல்வி ஆகியோர் மட்டும் வந்திருந்தனர். 

 

திமுக வார்டு உறுப்பினர்கள் யாரும் வராததால் துணைத்தலைவர் தேர்தல் ஒத்தி வைக்கப்படுவதாக தேர்தல் நடத்தும் அலுவலர் காளிமுத்தன் தேர்தல் பார்வையாளர் மாதவன், செயல் அலுவலர் சண்முகம் முன்னிலையில் அறிவித்தார். 

 

 

சார்ந்த செய்திகள்