Skip to main content

வேகமாக நிரம்பிவரும் வீராணம் ஏரி... விவசாயிகள் மகிழ்ச்சி!

Published on 23/08/2019 | Edited on 23/08/2019

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வீராணம் ஏரி வேகமாக நிரம்பி வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து வருகிறார்கள்.

கடலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய நீர் ஆதாரமாக வீராணம் ஏரி உள்ளது. இதன் முழு கொள்ளளவு 47.50  அடியாகும் இந்த ஏரியின் மூலம் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், ஸ்ரீமுஷ்ணம், புவனகிரி வட்ட பகுதிகளில் 48 ஆயிரத்து 850 ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. இதன்மூலம் இப்பகுதியில் உள்ள விவசாயிகள் விவசாயக் கூலித் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட்டு வருகிறது. 

 

The speedy filled veeranam lake ... farmers are happy!


மேலும் வீராணம் ஏரியிலிருந்து சென்னை குடிநீருக்காக தொடர்ந்து தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது.  கடந்த ஆகஸ்ட் மாதம் கீழணையில் இருந்து வடவாறு வழியாக தண்ணீர் திறக்கப்பட்டு வீராணம் நிரப்பப்பட்டது. இதனால் தொடர்ந்து சென்னைக்கு விநாடிக்கு 74 கன அடி தண்ணீர் அனுப்பப்பட்டது. இந்த நிலையில் கடும் வெயில் மற்றும் ஏரிக்கு நீர்வரத்து இல்லாததால் ஏரியின் நீர்மட்டம் கிடுகிடுவென சரிந்து 39 அடியாக இருந்தது. இதனால் சென்னைக்கு வினாடிக்கு 24 கன அடி தண்ணீர் அனுப்பினர். 

இந்தநிலையில் கர்நாடக பகுதியில் பலத்த மழை பெய்தது. இதையடுத்து அங்கிருந்த உபரிநீர் வினாடிக்கு 2 லட்சம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது இதனால் மேட்டூர் அணை கிடுகிடுவென நிரம்பி 116 அடி முழுகொள்ளவை எட்டியது. இதனைத்தொடர்ந்து கடந்த 13ம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்தார். இதனைத்தொடர்ந்து கல்லணையிலிருந்து கடந்த 17ஆம் தேதி தமிழக அமைச்சர்கள் கொள்ளிடம் மற்றும் காவிரியில் பாசனத்திற்கு தண்ணீரை திறந்தனர். கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்பட்ட தண்ணீர் வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் கும்பகோணம் அருகே உள்ள கீழணைக்கு வந்து சேர்ந்தது.  

 

The speedy filled veeranam lake ... farmers are happy!


இதனையடுத்து பொதுப்பணித்துறையினர் வீராணம் ஏரியை நிரப்பும் நோக்கோடு கடந்த புதன்கிழமை இரவு 11 மணி அளவில் வினாடிக்கு 500 கனஅடி தண்ணீரை வீராணம் ஏரிக்கு திறந்து திறந்து விட்டனர். இந்த தண்ணீர் வியாழக்கிழமை காலை வீராணம் ஏரியை அடைந்தது. இந்த தண்ணீரை வழிநெடுகிலும் விவசாய சங்கத்தினர். விவசாயிகள் மலர்த்தூவி காவிரி நீரை வரவேற்றனர். இந்தநிலையில் கீழணையில் இருந்து வீராணம் ஏரியில் இருந்து அனுப்பப்பட்ட தண்ணீர் படிப்படியாக உயர்த்தப்பட்டு வெள்ளிக்கிழமையென்று 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. வீராணம் ஏரி விரைவாக நிரம்பி வருகிறது இதனால் கடலூர் காவிரி டெல்டா பகுதி விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள். மேலும் வீராணம் ஏரியிலிருந்து தொடர்ந்து  சென்னைக்கு தண்ணீர் அனுப்பிட முடிவு செய்துள்ளனர். கீழணையில் இருந்து  வடவாறு வழியாக தண்ணீர் திறந்து விட்டதால் கீழணை பகுதியில் உள்ள மீனவர்கள் மீன் பிடித்து மகிழ்ச்சி அடைந்து வருகிறார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தண்ணீர் தட்டுப்பாடு ; தாக்குபிடிக்குமா 'சென்னை'

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Water scarcity; Attacking 'Chennai'

கோடைகால வெயிலின் தாக்கம் தீவிரமடைந்திருக்கும் நிலையில் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசும் மேற்கொண்டு வருகிறது. ஆரம்ப சுகாதார நிலையங்களில் நீர்ச்சத்து குறைபாட்டை தடுக்கும் உப்பு சர்க்கரை கரைசல் எனும் ஓ.ஆர்.எஸ் கரைசலை ஆயத்தமாக வைத்திருக்க தமிழக சுகாதாரத்துறைக்கு அரசு அறிவுறுத்தல் கொடுத்துள்ளது. 

கோடை காலங்களில் நீர்ச்சத்து குறைபாடு மற்றும் வெயிலின் தாக்கத்தை தனித்து கொள்வதற்கான ஏற்பாடுகள் ஆகியவற்றைத் தாண்டி மூன்றாவது காரணியாக பார்க்கப்படுவது குடிநீர் தட்டுப்பாடு. சில இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக காலி குடங்களுடன் பொதுமக்கள் போராட்டம் நடத்துவது போன்ற செய்திகள் தென்படுவதே இதற்கான சான்று. அதேபோல் கோடை காலங்களில் தண்ணீர் தட்டுப்பாட்டை அதிகம் கையாளும் இடமாக சென்னை உள்ளது. பல்வேறு ஏரிகளில் உள்ள நீர் இருப்பை நம்பியே சென்னையின் குடிநீர் தட்டுப்பாடு நீக்கப்பட்டு வருகிறது.

சென்னைக்கு குடிநீர் வழங்குவதில் மிக முக்கியமான ஏரி புழல் ஏரி. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 3,300 மில்லியன் கன அடி. தற்போது புழல் ஏரியில் இருக்கும் நீரின் அளவு 2,942 மில்லியன் கன அடி ஆகும். வினாடிக்கு 570 கன அடி நீர் வந்து கொண்டிருக்கும் நிலையில் புழல் ஏரியில் இருந்து வினாடிக்கு 217 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அடுத்து சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குவது சோழவரம் ஏரி. 1,080 மில்லியன் கன அடி மொத்த கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் தற்போது 118 மில்லியன் கன நீர் மட்டுமே உள்ளது. தற்போது நீர்வரத்து இல்லாத நிலையில் சோழவரம் ஏரியில் இருந்து 168 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.  அடுத்தது செம்பரம்பாக்கம் ஏரி. சென்னை குடிநீர் தேவையில் முக்கிய பங்காற்றுகிறது. மொத்தம் 3,645 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட இந்த ஏரியில் தற்போது நீர் இருப்பு 2,384 மில்லியன் கன அடியாக இருக்கிறது. நீர்வரத்து இல்லாத நிலையில் வினாடிக்கு 46 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

சென்னையின் அடுத்த குடிநீர் ஆதாரம் பூண்டி ஏரி. 3,231 மில்லியன் கன அடி மொத்த கொள்ளளவு கொண்ட இந்த ஏரியில் நீர் இருப்பு 978 மில்லியன் கன அடியாக உள்ளது. இந்த ஏரிக்கும் நீர்வரத்து இல்லாத நிலையில் வினாடிக்கு 525 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக இருக்கும் வீராணம் ஏரி வறண்டு காணப்படும் நிலை இருக்கிறது. 1,475 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட இந்த ஏரியில் நீர் இருப்பு கணக்கிட முடியாத அளவிற்கு மிகவும் குறைவாக இருக்கிறது. வீராணம் ஏரியில் நீர்வரத்தும் இல்லை நீர் வெளியேற்றமும் இல்லாத சூழ்நிலை இருக்கிறது.

இப்படி மொத்தமாக சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஏரிகளின் மொத்த கொள்ளளவு 11.75 டிஎம்சி ஆக இருக்கிறது. இதில் வீராணம் ஏரி முற்றிலும் வறண்டு விட்ட நிலையில் புழல், செம்பரம்பாக்கம், பூண்டி, சோழவரம் உள்ளிட்ட ஏரிகளில் தற்பொழுது 6.88 டிஎம்சி நீர் மட்டுமே இருக்கிறது. வரும் கோடை காலத்தில் இந்த அளவு தண்ணீரே சென்னையின் குடிநீர் பிரச்சனையை தீர்க்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Next Story

நீர் மோர் பந்தல் திறப்பதில் கோஷ்டி பூசல்;  மாறி மாறி புகாரளிக்கும் அதிமுக!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Group fight in opening of Neer Mor Pandal; AIADMK reports alternately

அண்மையில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி, கோடைகாலம் என்பதால் வெப்பத்தை தணிப்பதற்காக நீர் மோர் பந்தல் அமைக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். அதன்படி அதிமுகவினர் பல இடங்களிலும் நீர் மோர் பந்தல்களை அமைத்து வருகின்றனர். இந்நிலையில் கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பதில் இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதல் போக்கு  காரணமாக மாறி மாறி புகார் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் திருப்பாதிரிபுலியூர், மஞ்சக்குப்பம் மற்றும் முதுநகர் பகுதிகளில் அதிமுக மாநில எம்ஜிஆர் இளைஞரணி துணைச் செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் அவருடைய ஆதரவாளர்கள் நீர் மோர் பந்தல் திறக்க ஏற்பாடு செய்துள்ளனர். இந்நிலையில் முன்னாள் தொழில்துறை அமைச்சரும், அதிமுக மாவட்ட செயலாளருமான எம்.சி.சம்பத், அனுமதியின்றி நீர்மோர் பந்தல் அமைக்க அனுமதி தந்தால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என காவல்துறையில் வாய்மொழி புகார் அளித்ததாகவும், அதிமுக சார்பில் மாவட்டச் செயலாளர்கள் யாரை பரிந்துரை செய்கிறார்களோ அவர்கள் தான் நீர் மோர் பந்தலை திறக்க வேண்டும் எனவும் கூறப்பட்டது.

இந்நிலையில் அனுமதியின்றி நீர் மோர் பந்தல் அமைப்பதற்காக செய்யப்பட்ட அனைத்து ஏற்பாடுகளையும் காவல்துறையினர் அப்புறப்படுத்தினர். அதேநேரம் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதிகோரி அதிமுக மாநில எம்ஜிஆர் அணி இளைஞரணி செயலாளர் கார்த்திகேயன் அவருடைய ஆதரவாளர்களுடன் கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். நீர் மோர் பந்தல் அமைக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எங்களை அறிவுறுத்தி உள்ளார். அதன்படி நாங்கள் அதை செய்து வருகிறோம் என அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மனு கொடுக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அதிமுக மாவட்ட அவைத்தலைவர் குமார் தலைமையில் கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட பல பகுதிகளில் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், அதிமுகவின் மாவட்டச் செயலாளர் எம்.சி.சம்பத் யாரை அனுமதிக்கிறாரோ அவர்களுக்கு மட்டும்தான் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி அளிக்க வேண்டும். இல்லை என்றால் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளனர்.

இப்படி கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பு தொடர்பாக அதிமுகவினர் இரு கோஷ்டியாக மாறி மாறி மனு அளித்துள்ளது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.