Skip to main content

இந்த வெற்றியை காண கலைஞர் இல்லை என நினைக்கும்போது மனம் கலங்குகிறது-ஸ்டாலின் உருக்கம்

Published on 23/05/2019 | Edited on 23/05/2019

தற்போது திமுக தலைவர் ஸ்டாலின் திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் தொண்டர்கள் முன்னிலையில் பேசினார்.

 

dmk leader stalin speech in anna arivalyam

 

நாடாளுமன்ற தேர்தலில் வெளிவந்திருக்கும் முடிவுகள் நாம் நினைத்த வெற்றியை தந்திருக்கிறது. இன்னும் தேர்தல் முடிவுகள் முடிவு பெறாத நிலையில் சட்டமன்ற மற்றும் மக்களவை தேர்தலில் வெற்றியை தேடி தந்திருக்கும் தமிழ் பெருங்குடி மக்களுக்கும், தொண்டர்களுக்கும் நன்றி.

 

 

கூட்டணி கட்சியில் உள்ள தலைவர்கள் தொண்டர்களுக்கும் என் இதய பூர்வமான நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். களத்தில் இறங்கியவுடனே நாம் ஒரு முடிவெடுத்து கொண்டோம் கலைஞர் இல்லாமல் இந்த தேர்தலை எப்படி எதிர்கொள்ள இருக்கிறோம் என நினைத்திருந்தோம். ஆனால் அவரிடம் நாம் கற்றுக்கொண்ட விவேகத்தினால் அவர் வழியில் வெற்றி பெற்றுள்ளோம். இந்த வெற்றியை அவரது நினைவிடத்தில் சமர்பிப்போம். இந்த வெற்றியைக் காண கலைஞர் இல்லை என நினைக்கும் பொழுது மனம் கவலையில் ஆழ்கிறது  என பேசினார்.

 

 

 

சார்ந்த செய்திகள்