பேராசிரியர் க.அன்பழகன் மறைவுக்குப் பிறகு திமுகவில் பொதுச்செயலாளர் யார் என்ற விவாதம் நடந்து வந்தது. பொதுச்செயலாளர் பதவிக்கு வர விரும்பிய துரைமுருகன், தனது பொருளாளர் பதவியில் இருந்து விலகினார். இதையடுத்து பொருளாளர் பதவிக்கு கட்சியின் சீனியர்கள் பலர் வர விரும்புகின்றனர். அந்த ரேஸில் யார் ஜெயிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பும் கூடியுள்ளது.
இந்த நிலையில் பொருளாளர் போன்ற முக்கிய பதவிகளில் சிறுபான்மை பிரிவைச் சேர்ந்த சிலருக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று சிறுபான்மை அணியை சேர்ந்த சிலர் முனுமுனுக்கின்றனர். இந்த பதவி துறைமுகம் காஜா அல்லது ரகுமான்கான், நீலகிரி முபாரக் போன்றவர்களுக்கு ஒதுக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதுமட்டும் இல்லாமல் கட்சியின் முக்கிய பதவிகள் விரிவாக்கப்பட்டு அதில் துணை பதவிகளில் சிறுபான்மையினருக்கு வாய்ப்பு வழங்கப்படுமா என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது உள்ள சூழலில் சிறுபான்மை மக்களின் வாக்கு வங்கியாக திமுக திகழ்வதால், சிறுபான்மை தலைவர்களுக்கு உயர் பதவி கிடைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் உடன்பிறப்புகளின் சிறுபான்மை பிரிவு நிர்வாகிகள் மத்தியில் எழுந்துள்ளது.