Skip to main content

என்.பி.ஆருக்கு எதிராக  மக்களை ஒன்று திரட்டி ஒத்துழையாமை இயக்கம்-திமுக அறிவிப்பு 

Published on 17/02/2020 | Edited on 17/02/2020

குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவிற்கு எதிராக போராட்டம் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், திமுக மற்றும் அதன்கூட்டணி கட்சிகள் சார்பில் “குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெறவும், என்.ஆர்.சிக்கு வழிகோலும் என்.பி.ஆர் தயாரிப்பதை நிறுத்தக் கோரும் வகையில் “கையெழுத்து இயக்கம்” நடத்தி பெறப்பட்ட கையெழுத்துப் படிவங்கள் நேற்று குடியரசுத் தலைவருக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

 

DMK announces Non-Cooperation Movement mobilizing people against NPR

 

இந்நிலையில் திமுக சார்பில், என்.பி.ஆருக்கு எதிராக மக்களை ஒன்று திரட்டி ஒத்துழையாமை இயக்கம் நடத்தப்படும் என  அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஹைட்ரோ கார்பன் திட்டங்களை ரத்து செய்து சிறப்பு மண்டலமாக அறிவிக்க வேண்டும். அதிமுக ஆட்சியில் ஒட்டுமொத்த அரசு பணி நியமனம் குறித்து சிபிஐ விசாரணை வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

 

 

சார்ந்த செய்திகள்