
ஆட்சி மாற்றம் நடக்கும் போதெல்லாம் அரசு வழக்கறிஞர்களும் மாற்றப்படுவார்கள். திமுக ஆட்சியைப் பிடித்ததும் அதிமுக அரசின் தலைமை வழக்கறிஞர், மாநில குற்றவியல் வழக்கறிஞர், அரசு ப்ளீடர் உள்ளிட்ட பலரும் ராஜினாமா செய்தனர். அந்த பதவிகளில் புதியவர்களை நியமித்தது திமுக அரசு. அதன்படி, அரசின் தலைமை வழக்கறிஞராக மூத்த வழக்கறிஞர் சண்முகசுந்தரம் நியமிக்கப்பட்டார்.
இது ஒரு புறமிருக்க, தமிழக முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் அரசு வழக்கறிஞர்களை நியமித்து வருகிறது திமுக தலைமை . இந்த நிலையில், திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட தோழமை கட்சிகள் அனைத்தும், அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் தங்களுக்குப் பிரதிநிதித்துவம் வேண்டும் என திமுக தலைமையிடம் கேட்டு வருகின்றன. ஆனால், தோழமைக் கட்சிகளுக்கு இந்த பதவிகளை தருவதில் திமுகவுக்கு உடன்பாடில்லையாம். இதனால் அதிருப்தியில் இருக்கின்றனவாம் தோழமைக் கட்சிகள்.