Skip to main content

கர்நாடக அரசை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட தேமுதிகவினர்! (படங்கள்)

Published on 20/08/2021 | Edited on 20/08/2021

 

 

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் இன்று (20.08.2021) கர்நாடக அரசை கண்டித்து மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தேமுதிக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கழகப் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். நிகழ்ச்சியில் விஜய பிரபாகரன், ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மற்றும் மகளிர் அணியினரும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

கள்ளச்சாராய உயிரிழப்பு; தேமுதிக போராட்டம் அறிவிப்பு!

Published on 21/06/2024 | Edited on 21/06/2024
struggle Announcement DMDK party for kallakurichi incident

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. சிகிச்சையில் இருப்பவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து வருகின்றனர். இதனால் இறப்புகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் கள்ளச் சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 49 ஆக உயர்ந்துள்ளது. இதுவரையில் கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் 27 பேரும், சேலம் மருத்துவமனையில் 15 பேரும், விழுப்புரம் மருத்துவமனையில் 4 பேரும், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் 3 பேர் என மொத்தம் 49 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 4 பெண்களும் அடங்குவர். மேலும் 89 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இத்தகையச் சூழலில் கள்ளச்சாராய மரண சம்பவத்தைக் கண்டித்து அதிமுக, விசிக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என எற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் போதையில்லா தமிழகத்தை உருவாக்கத்தவறிய திமுக அரசைக் கண்டித்து தேமுதிக சார்பில் ஜூன் 25 இல் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “திமுக அரசின் நிர்வாகச் சீர்கேட்டைக் கண்டித்து தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் சார்பாக (25-02024) செவ்வாய்க்கிழமை அன்று காலை 10.00 மணி அளவில் மாவட்ட தலைநகரங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்க இருக்கிறது.

இதில் மாவட்ட கழக செயலாளர்கள், உயர் மட்ட குழு உறுப்பினர்கள், அனைத்து ஒன்றிய நகர பேரூர் கழக கிளைக் கழக நிர்வாகிகள், தொண்டர்கள், சார்பு அணி நிர்வாகிகள், மகளிர் அணி, பொதுமக்கள் என அனைவரும் பெருமளவில் கலந்து கொண்டு இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தை மாபெரும் வெற்றி ஆர்ப்பாட்டமாக நடத்தித் தர வேண்டும் என்று தேமுதிக சார்பாகக் கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

“அதிகாரிகளை மாற்றினால் போன உயிர் வந்துவிடுமா?” - பிரேமலதா விஜயகாந்த் விமர்சனம்

Published on 20/06/2024 | Edited on 20/06/2024
Premalatha Vijayakanth criticized Will the lost life come back if the officers are changed?

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கருணாபுரம் பகுதியில் நேற்று(19-06-24) கள்ளச்சாராயம் விற்கப்பட்டதாகவும், இதனைப் பலர் வாங்கி குடித்து பலியானோரின் எண்ணிக்கை தற்போது வரை 39 ஆக உயர்ந்துள்ளது. இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 100க்கும் மேற்பட்டோர் ஜிப்மர் மருத்துவமனை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம் எனப் பல்வேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். கள்ளச்சாராயம் குடித்து 30க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், கள்ளக்குறிச்சியில் உள்ள மருத்துவமனையில் விஷச் சாராயம் அருந்தி சிகிச்சை பெற்று வருபவர்களை, தே.மு.தி.க பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “தற்போது வரை 39 பேர் உயிரிழந்துள்ளனர். இன்னும் 10, 15 நபர்களுக்கு உயிர் ஆபத்தான நிலையில் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இந்தச் சம்பவம் போன்று கடந்த மரக்காணம் பகுதியில் பல உயிரிழப்பு ஏற்பட்டது. அப்போது கள்ளச்சாராயம் முற்றிலும் ஒழிக்கப்படும் என்று முதல்வர் கூறினார். அதே போல் ஆட்சிக்கு வந்ததும் போதைப்பொருள் இல்லா தமிழகத்தை உருவாக்குவேன் என்று முதல்வர் கூறினார். ஆனால், இன்றைக்கு பல உயிர்கள் ஊசலாடிக்கொண்டிருக்கிறது. 

எதிர்கட்சித் தலைவராக இருந்தபோது, அடிக்கடி வரும் முதல்வர், இன்றைக்கும் 38 உயிர்கள் இறந்த போதும் ஏன் இன்னும் வரவில்லை?. மக்களுக்கு பதில் சொல்ல வேண்டிய முதல்வர் ஏன் இன்னும் இங்கு வரவில்லை?. அதுமட்டுமல்லாமல், வெறும் தேர்தலை மட்டுமே மையாகக் கொண்டு ஆட்சி செய்கிறார்கள். வெறும் தேர்தல் அரசியல் மட்டுமே இங்கு நடக்கிறதே தவிர மக்களுக்கு பயன் அளிக்கக்கூடிய எந்தவித திட்டங்களும் தமிழ்நாட்டில் நடந்ததாக தெரியவில்லை. அடுத்த தேர்தலை நோக்கிதான் அரசியல் கட்சிகள் செயல்படுகின்றன. மக்களை பற்றி சிந்திக்கவில்லை. என்ன நடந்தாலும் முதலில் அதிகாரிகளைத்தான் மாற்றுகின்றனர். அதிகாரிகளை மாற்றினால் மட்டும் போன உயிர் வந்துவிடுமா?” என்று கூறினார்.