Skip to main content

கூட்டுறவுச் சங்கப் பணியாளர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு!

Published on 07/11/2023 | Edited on 07/11/2023

 

Diwali bonus announcement for co-operative society workers

 

கூட்டுறவுச் சங்கப் பணியாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.

 

தமிழக கூட்டுறவுச் சங்கங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 2022-2023 ஆண்டுக்கான மிகை ஊதியம் (போனஸ்) மற்றும் கருணைத் தொகை 2023-2024-இல் வழங்க தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார். போனஸ் சட்டத்தின் கீழ் வரும் கூட்டுறவுச் சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு சென்ற ஆண்டைப் போலவே அவர்களுடைய சம்பளத்தில் 10 சதவீதம் போனஸ் (போனஸ் மற்றும் கருணைத் தொகை) வழங்க அரசு ஆணையிட்டுள்ளது.

 

போனஸ் சட்டத்தின் கீழ் வராத, தலைமைச் சங்கங்கள் மற்றும் மத்திய சங்கங்களின் பணியாளர்களுக்கு 3 அயிரம் ரூபாயும், தொடக்க சங்கங்களின் பணியாளர்களுக்கு 2 ஆயிரத்து நானூறு ரூபாயும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கருணைத் தொகையாக வழங்கவும் ஆணையிடப்பட்டுள்ளது. இதன்படி, தமிழ்நாடு முழுவதும் உள்ள தலைமை கூட்டுறவுச் சங்கங்கள், மத்திய கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் தொடக்க கூட்டுறவு சங்கங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் 44 ஆயிரத்து 270 பணியாளர்களுக்கு  28 கோடியே ஒரு இலட்சம் ரூபாய் போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படவுள்ளது என கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்