Published on 09/02/2021 | Edited on 09/02/2021
இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தப் போராட்டத்தில், சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் பங்கேற்று அரசிடம் தொடர்ந்து தங்களுடைய கோரிக்கைகளை வைத்து வருகின்றனர். அப்போது, மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் உதவித்தொகையை, மாதம் 3 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் 80 சதவீதத்திற்கும் அதிகமான மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் 5,000 ரூபாய் வழங்க வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், தனியார் துறைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைச் சட்டத்தின் கீழ், 5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி, காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.