Skip to main content

கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர்!

Published on 22/01/2021 | Edited on 22/01/2021

 

covid vaccine tamilnadu health minister

 

நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி போடும் பணியை ஜனவரி 16- ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி காணொளி மூலம் தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து மாநிலங்களில் கரோனா தடுப்பூசிப் போடும் பணியை அந்தந்த மாநில முதல்வர்கள் தொடங்கி வைத்தனர்.

 

நாடு முழுவதும் முதற்கட்டமாக முன்களப்பணியாளர்கள் 3 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசிகள் (கோவிஷீல்டு, கோவாக்சின்) செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழக சுகாதாரத்துறை அமைச்சரும், மருத்துவருமான சி.விஜயபாஸ்கர், சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் ‘கோவாக்சின்’ என்ற கரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொண்டார்.

 

கரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள பொதுமக்கள் தயக்கம் காட்டி வரும் நிலையில், அவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையிலும், ஊக்கப்படுத்தும் வகையிலும் தடுப்பூசியை அமைச்சர் போட்டுக்கொண்டுள்ளார்.  

 

சார்ந்த செய்திகள்