Published on 16/10/2020 | Edited on 16/10/2020
கேரளா, கர்நாடகா, ராஜஸ்தான், சத்தீஸ்கர், மேற்கு வங்கம் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கு உயர்மட்ட குழுவை அனுப்பியது மத்திய அரசு.
கரோனா பாதிப்பை கட்டுப்படுத்த ஐந்து மாநிலங்களுக்கு உயர்மட்ட குழுவை மத்திய அரசு அனுப்பியுள்ளது. குழுவில் இணைச்செயலாளர், பொது சுகாதார நிபுணர், மருத்துவர் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். கரோனா தொற்று தடுப்பு, திறன்மிகு மருத்துவ மேலாண்மை போன்றவற்றில் மாநிலங்களுக்கு மத்திய குழு உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.
கர்நாடகா- 10.1%, கேரளா- 4.3%, மேற்குவங்கம்- 4.2%,ராஜஸ்தான்- 2.3%, சத்தீஸ்கர்- 2.1% கரோனா பாதிப்பு உள்ளது.