கரோனா நோய் தொற்று சென்னை, மதுரையை அடுத்து திருச்சியில் மிக வேகமாக பரவி வருகிறது. திருச்சி மாநரின் முக்கிய பகுதியான பெரியகடைவீதி உள்ளிட்ட முக்கிய பகுதியில் முழு ஊரடங்கு உத்திரவிடப்பட்டுள்ளது. கரோனா தடுப்பு மற்றும் பாதுகாப்பு குறித்து சுகாதாரத்துறை மற்றும் காவல்துறையினர் மிக தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.
திருச்சியில் கரோனா பாதிப்பு என்பது போலிஸ் துறையினரையும் விட்டு வைக்கவில்லை. திருச்சி மாநகர ஆயுதப்படை உதவி ஆணையர் ரவிச்சந்திரனுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. சிகிச்சைக்காக அவர் கேஎம்சியில் சேர்க்கப்பட்ட நிலையில் கேகே நகர் ஆயுதப்படை வளாகத்தில் உள்ள அவரது அலுவலகம் மூடப்பட்டது.
கடந்த 3 நாட்களாக உதவி கமிஷனருக்கு ஜூரம் இருந்தது. இதன் அடிப்படையில் கரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டு பின் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது டிவைர்கள், காவலர்களுக்கு கரோனா டெஸ்ட் எடுக்கப்பட உள்ளது.
திருச்சி மாநரகரில் ஏற்கனவே திருச்சி மாநகர ஆயுப்படை காவலர்கள் மற்றும் மாநகர காவல்துறையினர் அடுத்து உதவி கமிஷனருக்கும் என கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.