Skip to main content

ஆ.இரா.வேங்கடாசலபதிக்கு சாகித்ய அகாடமி விருது-முதல்வர் வாழ்த்து

Published on 18/12/2024 | Edited on 18/12/2024
Sahitya Akademi Award-Principal congratulates A.Ira.Venkatachalapathy

2024 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது எழுத்தாளர் ஆ.இரா.வெங்கடாஜலபதிக்கு வழங்கப்பட்டுள்ளது.

'திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சியின் 1908' என்ற ஆய்வு நூலுக்காக சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 'வ.உ.சியில் இருந்து தான் என்னுடைய எழுத்து பயணம் தொடங்கியது. நெல்லை எழுச்சியை பற்றிய நூலுக்கு சாகித்ய அகாடமி கிடைத்ததில் மகிழ்ச்சி. நூலின் தன்மையை அங்கீகரித்து சாகித்திய அகாடமி வழங்கியிருப்பது மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது' என ஆ.இரா.வெங்கடாசலபதி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

விருதுபெற்ற ஆ.இரா.வெங்கடாசலபதிக்கு பல்வேறு தரப்புகளில் இருந்தும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. இந்நிலையில் தமிழக முதல்வர் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள 'எக்ஸ்' வலைத்தள பதிவில், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்

நாற்பதாண்டுகளாகக் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் அவர்களைப் பற்றிய ஆய்வில் மூழ்கி, அதன் விளைச்சலாக ஆ.இரா.வேங்கடாசலபதி அவர்கள் கொண்டு வந்துள்ள வேளையில், அவரது "திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சி.யும் 1908" நூல் சாகித்திய அகாடமி விருது பெறுவது இரட்டிப்பு மகிழ்ச்சியைத் தருகிறது!

கலகம் என்று அன்றைய ஆங்கிலேய ஆட்சியாளர்கள் குறிப்பிட்டதைத் திருத்தி, நம் 'எழுச்சி' எனப் பதிவு செய்த வரலாற்றாய்வாளர் ஆ.இரா.வேங்கடாசலபதி அவர்களுக்கு என் வாழ்த்துகள்! பாராட்டுகள்!' என தெரிவித்துள்ளார்.

சார்ந்த செய்திகள்