Published on 18/12/2019 | Edited on 18/12/2019
குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிராக நாடு முழுவதும் பெரியளவில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தமிழகத்திலும் கல்லூரி மாணவ, மாணவிகள் முன்வந்து போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் டிசம்பர் 16ஆம் தேதி திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பல்வேறு இஸ்லாமிய அமைப்புகளை சேர்ந்தவர்கள், பொதுமக்கள் இணைந்து, சட்டத்திருத்தத்தைக் கண்டித்து போராட்டம் நடத்தினர். இதில் திடீரென பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் உருவபொம்மைகளை போராட்டக்காரர்கள் தீ வைத்து எரித்தனர்.
இதையடுத்து, ஏ.ஐ.எம்.ஐ.எம், மதிமுக, விடுதலை சிறுத்தை, கட்சி ஜமாத் உலமா, மனிதநேய ஜனநாயக கட்சி ஆகிய கட்சிகளை சார்ந்த முக்கிய நிர்வாகிகள் 91 பேர் மீது 4 பிரிவின் கீழ் வாணியம்பாடி நகர போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.