Skip to main content

சென்னை சில்க்ஸ் புதிய கட்டிட கட்டுமான பணிகளுக்கு தடை!

Published on 25/07/2018 | Edited on 25/07/2018
chennai silks


சென்னை தி.நகர் சென்னை சில்க்ஸின் புதிய கட்டிட கட்டுமான பணிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.


பிரபல துணிக்கடையான சென்னை சில்க்ஸ் நிறுவனம் தி.நகரில் புதியதாக கட்டிக்கொண்டிருக்கும் கட்டிட்ட கட்டுமான பணியில் சி.எம்.டி.ஏ. விதிகள் மீறப்பட்டுள்ளதாக அப்பகுதியில் வசிக்கும் கண்ணன் பாலச்சந்திரன் என்பவர் வழக்கில் தொடர்ந்திருந்தினர். அந்த வழக்கு நீதிபதி கிருபாகரன், நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

 

 

அந்த விசாரணையில் கட்டிட அனுமதி (21.06.2018) வழங்கிய 20 நாளில் 40% கட்டிடம் கட்டப்பட்டுள்ளது ஆச்சரியம் அளிக்கிறது என தெரிவித்த நீதிபதிகள்.

எந்த சூழ்நிலைகளின் அடிப்படையில், சென்னை சில்க்ஸுக்கு கட்டிட அனுமதி வழங்கப்பட்டது என  வினவிய நீதிபதிகள். இது சம்பந்தமாக அடுக்கு மாடி கட்டிட குழுவினர் ஆகஸ்ட் 3ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என் உத்தரவுவிட்டனர்.

 

சார்ந்த செய்திகள்