Skip to main content

அசாத்திய குரலால் அதிசயிக்கவைத்த மாற்றுத்திறனாளி இளைஞர்...! நெகிழவைத்த டி.இமான்! 

Published on 22/09/2019 | Edited on 22/09/2019

சமூகவலைதளத்தில் பார்வையற்ற இளைஞரின் அசாத்திய பாடல் திறமையை வெளிப்படுத்திய வீடியோவை பார்த்த பிரபல இசையமைப்பாளர் டி.இமான் அந்த இளைஞருக்கு திரைப்படத்தில் பாட வாய்ப்பு தருவதாக கூறியிருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Wonderful Youth With an Impossible Voice


கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள நொச்சிப்பட்டி என்ற கிராமத்தை சேர்ந்தவர் திருமூர்த்தி. பார்வையற்ற மாற்றுத்திறனாளியான திருமூர்த்தி சிறுவயதிலிருந்தே இசையில் ஆர்வம் கொண்டவராக இருந்துள்ளார். அண்மையில் அவர் தாய்மை பற்றி அவர் பாடிய பாடல் காட்சி ஒன்றை அவரது நண்பர்கள் முகநூலில் பதிவிட்டு இருந்தனர். அதனையடுத்து விஸ்வாசம் திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த ''கண்ணான கண்ணே'' என்ற திரைப் பாடலையும் திருமூர்த்தி பாடி அதை அவரது நண்பர்கள் முகநூலில் பதிவிட்டிருந்தனர்.

 

Wonderful Youth With an Impossible Voice

 

அந்த காணொளி இசையமைப்பாளர் டி.இமானின் பார்வையில் பட்டதை அடுத்து மாற்றுத்திறனாளி இளைஞரான திருமூர்த்திக்கு பாட வாய்ப்பு தருவதாக இசையமைப்பாளர் டி.இமான் அறிவித்துள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

காவு வாங்கிய குளம்; கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய சிறுவர்களின் உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 The pool of water; The lost their live of the boys left the village in mourning

கடலூரில் குளத்தில் இறங்கி குளிக்க முயன்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது நந்தீஸ்வர மங்கலம். இந்தக் கிராமத்தில் வசித்து வந்த ராமமூர்த்தி என்பவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். திலீப் ராஜ்(16), தினேஷ்(14) ஆகிய இரு மகன்களும் வெளியூரில் விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

சிறுவர்கள் திலீப் ராஜ் மற்றும் தினேஷ் ஆகியோர் வீட்டுக்கு அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது ஆழமான பகுதிக்கு இருவரும் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் நீரில் மூழ்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குளத்துக்கு குளிக்கச் சென்ற சிறுவர்கள் காணாமல் போனதால் பதறியடித்த பெற்றோர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு குளத்தில் இறங்கி தேட ஆரம்பித்தனர். பின்னர், வெகு நேரத்திற்கு பின் இருவரின் உடலையும் கைப்பற்றிய மீட்புப்படையினர் உடல்களை கரைக்கு கொண்டு வந்தனர். சிறுவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். உயிரிழந்த சிறுவர்கள் இருவரின் உடலும் காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கிப் படித்து வந்த சிறுவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

12 வயது நவ்யா உமேஷ் பாடியுள்ள இறைவி பாடல்

Published on 09/03/2024 | Edited on 09/03/2024
12 year old Navya Umesh sung iraivi album

சர்வதேச செஸ் ஒலிம்பியாட், குளோபல் இன்வெஸ்டர்ஸ் மீட், கேலோ இந்தியா என குறிப்பிடத்தக்க நிகழ்வுகள் மட்டுமல்லாது மாவீரன், ஜெயிலர், ஜவான் மற்றும் லால் சலாம் படங்களின் ஆடியோ லான்ச், எனப் பல நிகழ்வுகளை வெற்றிகரமாக நிகழ்த்திய கலை இயக்குநரும் நிகழ்வு மேலாளருமான உமேஷ் ஜே குமார் மற்றும் நிகழ்வு மேலாளர் ராகிணி முரளிதரன் ஆகியோரின் மகள் நவ்யா உமேஷ்.

ஏழாம் வகுப்பு படித்து வரக்கூடிய இவர், பாடி நடித்த ‘இறைவி’ பாடல் மகளிர் தின கொண்டாட்டமாக வெளியாகியுள்ளது. வெங்கடேசன் இயக்கியுள்ள இப்பாடலை நவ்நீத் சுந்தர் இசையமைத்துள்ளார். சமூக தொழில் முனைவோர் தீப்தி வரிகளை எழுதியுள்ளார். ‘என்ஜாய் எஞ்சாமி’ மற்றும் ‘கட்சி சேரா’ போன்ற வைரல் வீடியோக்களுக்கு நடனம் அமைத்த ‘தி டான்சர்ஸ் கிளப்’ இந்தப் பாடலுக்கான நடனம் அமைத்துள்ளனர். சோனி மியூசிக்கில் மகளிர் தினத்தன்று வெளியாகியுள்ள இந்தப் பாடலை, இயக்குநர் விக்னேஷ் சிவன் வெளியிட்டார்.