சென்னையில் கரோனாவைக் கட்டுப்படுத்த ஐந்து அமைச்சர்கள் கொண்ட குழுவை அமைத்தது தமிழக அரசு. ஜெயக்குமார், கே.பி.அன்பழகன், காமராஜ், உதயகுமார், எம்.ஆர்.விஜயபாஸ்கர் குழுவில் இடம்பெற்றுள்ளனர். ஒவ்வொரு மண்டலத்திலும் பாதிப்பைக் கட்டுப்படுத்தும் பணிகளை ஒருங்கிணைக்கக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மாதவரம், தண்டையார்பேட்டை, ராயபுரம் ஆகிய மண்டலங்களுக்கு அமைச்சர் ஜெயக்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல் அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூர் ஆகிய மண்டலங்களுக்கு அமைச்சர் கே.பி.அன்பழகன் நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும் அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் ஆகிய மண்டலங்களுக்கு அமைச்சர் காமராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். திருவொற்றியூர், மணலி, திரு.வி.க.நகர் ஆகிய மண்டலங்களுக்கு அமைச்சர் உதயகுமாரும், அம்பத்தூர், வளசரவாக்கம், ஆலந்தூர் ஆகிய மண்டலங்களுக்கு எம்.ஆர்.விஜயபாஸ்கரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் நாளுக்கு நாள் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் அமைச்சர்கள் குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.