![c1](http://image.nakkheeran.in/cdn/farfuture/y0aHgaZuvvg22AQ5GxEJ73X6RuvIVP-LPQbLUvR5tsw/1619257363/sites/default/files/2021-04/ne2323.jpg)
![cw2](http://image.nakkheeran.in/cdn/farfuture/SbomneJKBkD7Hhd97X679rgi2a3KT_FN2U43cAzX6wg/1619257363/sites/default/files/2021-04/n23.jpg)
![cw1212](http://image.nakkheeran.in/cdn/farfuture/jgiz9gFVWF_MokHe3VGdvbi0ni8p-6TS5oUQR1dRafs/1619257363/sites/default/files/2021-04/neg333322.jpg)
Published on 24/04/2021 | Edited on 24/04/2021
கென்யா நாட்டின் நைரோபியிலிருந்து சென்னை விமான நிலையத்திற்கு வந்த 5 பார்சல்களை சுங்கத்துறை அதிகாரிகள் நேற்று (23/04/2021) பரிசோதனை செய்தனர். அதில், மர பூச்செண்டு மற்றும் பாக்கெட்டுகளில் மறைத்து வைத்திருந்த ரூபாய் 1.17 கோடி மதிப்புள்ள 46.8 கிலோ காட் இலைகள் என்டிபிஎஸ் (NDPS) சட்டப்படி பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை, திருச்சி, மதுரை உள்ளிட்ட பன்னாட்டு விமான நிலையங்களில் தங்கம், போதைப் பொருள்களை சுங்கத்துறையினர் அவ்வப்போது சோதனை நடத்தி பறிமுதல் செய்து வருகின்றனர். இந்தச் சோதனையில் வெளிநாட்டு கரன்சிகளும் பறிமுதல் செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.