வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுக்காவுக்கு உட்பட்டது சேர்பாடி கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் யாராவது இறந்தால் அங்குள்ள ஆற்றை கடந்து உடலை எடுத்து சென்று ஆற்றின் ஓரம் எரிக்கவோ, புதைக்கவோ முடியும். மழைக்காலங்களில் ஆற்றை கடந்து சுடுகாட்டுக்கு செல்வதில் சிரமம் இருந்து வருகிறது.

Advertisment

buried incident in vellore

இதனால் ஆற்றை கடக்க ஒரு சிறுப்பாலம் கட்டித்தர வேண்டும் என கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக அந்த கிராம மக்கள் அரசுக்கு பலப்பலமுறை கோரிக்கை விடுத்துள்ளனர். அதேபோல் எம்.எல்.ஏ, எம்.பி என முறையிட்டும் யாரும் அதற்காக இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். இதனால் மழைக்காலங்களில் யாராவது இறந்துவிட்டால் அந்த உடலை ஆற்றில் இறங்கி கொண்டு செல்லும்போது நெஞ்சுவரை தண்ணீரில் மிதந்தனர். அந்த ஆற்றில் தண்ணீர் வடியும் வரை இதேநிலைதான்.

Advertisment

இந்நிலையில் இரண்டு தினங்களுக்கு முன்பு அந்த ஊரை சேர்ந்த ஒரு 75 வயதுள்ள மூதாட்டி நோய் வாய்ப்பட்டு இறந்துள்ளார். அவரின் உடலை ஆற்றில் இடுப்பு வரையிலான தண்ணீரில் கொண்டு சென்று அடக்கம் செய்துள்ளனர்.

இதுப்பற்றிய தகவல் சில ஆதரவாளர்கள் கூற அதைக்கேட்டு அதிர்ச்சியான அந்த தொகுதி எம்.எல்.ஏவும், திமுக மத்திய மா.செவுமான நந்தகுமார், அரசாங்கத்திடமும், மாவட்ட நிர்வாகத்திடமும் பலமுறை கோரிக்கை வைத்தும் இதுவரை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. என் தொகுதி நிதியில் இருந்து பாலம் அமைத்து தர நிதி ஒதுக்கி தருகிறேன் எனச்சொல்லியும் நடவடிக்கை எடுக்கவில்லை, நான் என்ன செய்வது, எல்லாவற்றுக்கும் போராடிக்கொண்டு தான் இருக்கிறேன் என்றுள்ளார்.

Advertisment

அண்மையில் பாலத்திலிருந்துகீழே கயிறின் மூலம் சடலம் இறக்கப்பட்டு உடல் மயானத்திற்கு எடுத்து சென்றதுபெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.இன்றளவும்இறந்தவர்களை அடக்கம் செய்யவும் போராடுகிறார்கள் வேலூர் மாவட்டத்தின் பெரும்பாலான கிராம மக்கள்.