2025 ஆம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டம் இன்று நடைபெற இருக்கிறது. ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற இருக்கிறது. அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நிகழ்ந்த பாலியல் வன்கொடுமை மற்றும் அதனையொட்டி எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்த அனுமதி மறுப்பது உள்ளிட்டவை பேசுபொருளாக இருக்கும் நிலையில் பரபரப்பான அரசியல் சூழலில் இன்று ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்க இருக்கிறது.
அதேபோல் முந்தைய காலங்களில் தமிழக அரசு கொடுக்கும் உரையை ஆளுநர் திருத்தங்கள் செய்து வாசித்தது பேசுபொருளாகி இருந்தது. இதற்காக ஆளுநர் மீது சட்டப்பேரவையிலேயே பல்வேறு எதிர்வினைகளை தமிழக அரசு செய்திருந்தது. இதனால் ஆளுநர் பாதியிலேயே உரையை முடித்துக் கொண்டு சட்டப்பேரவையில் இருந்து கிளம்பிய சம்பவமும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் இன்று நடைபெறும் கூட்டத்தொடரில் ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக அரசின் உரையை அப்படியே வாசிப்பாரா? உள்ளிட்ட பல்வேறு எதிர்பார்ப்புகளுடன் இன்று கூட இருக்கிறது தமிழக சட்டப்பேரவை.