சென்னை மடிப்பாக்கத்தில் வெளி மாநிலப் பெண்களை அழைத்து வந்து பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்த கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பிரபல பாலியல் தொழில் புரோக்கரை பாலியல் தொழில் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். அதோடு இணையதளம் மூலம் நடக்கும் குற்றங்களைத் தடுக்க தமிழ்நாடு அரசு செயலாளரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
சென்னையில் பெண்களுக்கு வேலை வாங்கித் தருவதாகக் கூறி வெளி மாநிலப் பெண்களைத் தனது கட்டுப்பாட்டில் தங்க வைத்து பாலியல் தொழில் செய்து வருவதாகக் கிடைத்த ரகசிய தகவலின் பேரில் பாலியல் தொழில் தடுப்பு பிரிவு உதவி ஆணையாளர் ராஜலட்சுமி தலைமையில், காவல் ஆய்வாளர் சீனிவாசன் மற்றும் தனி படையினர் அவ்விடத்திற்குச் சென்று வெளிமாநிலப் பெண்களை காரில் அழைத்து வந்து கஸ்டமர்கள் விரும்பும் இடத்திற்கு அனுப்பி வைப்பதை உறுதி செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்தில் வைத்து புரோக்கர் சோமன் சால்மன் என்பவரை கைது செய்து, அவர்கள் பிடியில் இருந்த வெளி மாநிலப் பெண்களை மீட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு அவரிடமிருந்த கார் மற்றும் செல்போன் லேப்டப் போன்றவற்றையும் கைப்பற்றியுள்ளனர்.
மேலும் விசாரணையில் சென்னையில் பல பாலியல் தொழில் புரோக்கர்களுக்கு வெளிமாநிலப் பெண்களை கோவிலம்பாக்கத்தில் உள்ள ராஜா நகர் என்னும் இடத்தில் இந்த பெண்களை தங்க வைத்து எல்லா புரோக்கர்களுக்கும் சப்ளை செய்து வந்துள்ளார். பின்னர் அவர்கள் கைது செய்யப்பட்டு ஆலந்தூர் நீதிமன்றம் கொண்டு சென்று நீதிமன்றத்தின் உத்தரவின்படி சென்னை புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் மீட்கப்பட்ட பெண்களைப் பாதுகாப்பு கருதி சென்னை மயிலாப்பூர் அரசினர் மகளிர் காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர். 2022 ஆம் ஆண்டு முதல் 2023 ஜூன் வரையிலும் லோகேன்டோ ஆப்ஸ், ஜஸ்ட் டெல் ஆப்ஸ் செய்திகளில் மற்றும் ரகசிய தகவல்களின் மூலமாகவும் சுமார் 66 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றவாளிகளை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும் அவர்களது பிடியில் இருந்த 175 பாதிக்கப்பட்ட பெண்களை மீட்டு அவர்களது பாதுகாப்பு கருதி சென்னை மயிலாப்பூர் அரசு மகளிர் காப்பகத்தில் ஒப்படைத்தனர். தொடர்ந்து இந்த குற்றச் செயல்களில் ஈடுபட்டு வரும் 14 குற்றவாளிகளின் மீது தடுப்பு காவல் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் பாலியல் தொழில் குற்ற வழிவகை செய்யும் இணையதளங்களை முடக்கும் முயற்சிக்காக லொக்கோட்டோ செயலி மற்றும் இணையதளப் பக்கங்களை முடக்குவதற்கு மாநில சைபர் கிரைம் பிரிவு மூலமாக மெய்டி மினிஸ்ட்ரி ஆஃப் எலக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி கவர்மெண்ட் ஆப் இந்தியா மற்றும் கூகுள் நிறுவனத்திற்கு வேண்டுகோள் கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும் டிஜிட்டல் மீடியா எதிக்ஸ் கோட் ரூல்ஸ் 2021 மூலம் லோகேன்டோ செயலி மற்றும் இணையதள பக்கத்தின் மீது நடவடிக்கை எடுப்பதற்கு தமிழ்நாடு அரசின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவை துறையின் இன்பர்மேஷன் டெக்னாலஜி அண்ட் டிஜிட்டல் சர்வீஸ் டிபார்ட்மென்ட் தமிழ்நாடு செயலாளர் அவர்களுக்கு வேண்டுகோள் கொடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து பேசிய ஏ.வி.எஸ்., ஏ.சி. ராஜலட்சுமி, “சென்னை கமிஷ்னர் உத்தரவின் பெயரில் தீவர நடவடிக்கை எடுத்து வருகிறோம். எங்கள் டீமை அழைத்து கமிஷனர் பாராட்டியும் உள்ளார். இது மேலும் எங்களுக்கு உற்சாகத்தை தந்துள்ளது. ஆன்லைன் குற்றங்களை தடுக்கும் வகையில், ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசுக்கும் அனுப்பியுள்ளோம். அது மட்டும் கிடைத்தால் முழுமையாக குற்றங்களை தடுத்துவிட முடியும்” என்றார்.