Published on 09/04/2018 | Edited on 09/04/2018
சென்னையில் ஐ.பி.எல். போட்டிகளை நடத்தக்கூடாது என தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். காவிரி பிரச்சினை தீரும் வரை ஐ.பி.எல். போட்டிகள் நடத்த அனுமதி அளிக்கக்கூடாது என கமிஷனர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த வேல்முருகன், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல், சென்னையில் ஐ.பி.எல். போட்டி நடத்துவது ஆணவத்தின் உச்சம்.நாளை சென்னையில் நடைபெற உள்ள ஐ.பி.எல். போட்டியை நிறுத்த மாபெரும் முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என்று கூறியுள்ளார். மேலும், மத்திய அரசை கண்டித்து கருப்பு பலூன்களை பறக்க விட்டார்.