காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் உள்ள திமுக தலைமையிலான எதிர் கட்சிகள் தொடந்து பல போராட்டங்களை நடத்தியும் கூட மத்திய அரசு செவிடன் காதில் ஊதிய சங்கு போல் இருந்து வருகிறது.
இந்த நிலையில் தான் மீண்டும் திமுக தலைமையிலான எதிர் கட்சிகள் தமிழகம் முழுவதும் மனித சங்கிலி போராடத்தை நடத்தியது அதுபோல் திண்டுக்கல்லில் முன்னாள் அமைச்சரும் கழக துணை பொதுச் செயலாளருமான ஐ.பெரியசாமி தலைமையில் திமுக கூட்டணி கட்சிகளின் மனித சங்கிலி போராட்டம் திண்டுக்கல் மாநரில் உள்ள பெரியார் சிலை அருகே தொடங்கி ஒரு கிலோ மீட்டருக்கு மேல் கூட்டணி கட்சியினர் கைகோர்த்து நின்று மத்திய மாநில அரசுகளை கண்டித்து கோஷம் போட்டனர். அதைகண்டு ரோட்டில் சென்று கொண்டு இருந்த பொது மக்கள் கூட இந்த மனித சங்கிலி போராட்டத்தில் கலந்து கொண்டு திமுக கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவு கோடுத்தனர்.
இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமியிடம் கேட்டபோது. ...இந்த போராட்டம் காவிரியை மீட்பதற்காக மட்டுமல்ல மாநில உரிமைகளையும் மீட்பதற்காகவும் ஒரு தொடர் போராட்டமாக இருந்து வருகிறது. மத்தியில் ஆளும் பிஜேபி அரசும் மாநிலத்தில் ஆளும் எடப்பாடி அரசும் கைகோர்த்து கொண்டு வருகிற பாராளுமன்ற தேர்தலை சந்திக்க இருக்கிறார்கள். அதுனால தான் காவேரி பிரச்சனையில் மாநில அரசு மவுனம் காத்து வருகிறது. அதுபோல் தமிழகத்தில் உள்ள ஏழு கோடி மக்களின் நலனிலும் இந்த இபிஎஸ் ஒபிஎஸ் அரசு அக்கறை காட்டவில்லை. மற்ற மாநிலங்களில் இந்த மத்திய அரசு மாநில கட்சிகளை பிரித்து வாழும் சூழ்நிலையை உருவாக்கி வருகிறது. அது தமிழ் நாட்டில் எடுபடாது. இங்கு அனைத்து எதிர்க்கட்சிகளும் ஸ்டாலின் பின்னால் ஒரு அணியாக இருக்கிறார்கள். அதுனால கூடிய விரவில் ஸ்டாலின் தலைமையில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரும். அதுபோல் மத்தியிலும் ஆட்சி மாற்றம் ஏற்படும். அதில் எந்த சந்தேகமும் இல்லை என்று கூறினார்.
இந்த மனித சங்கிலி போராட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்களான ஒட்டன்சத்திரம் சக்கரபாணி. பழனி ஐ.செந்தில்குமார். நத்தம் ஆண்டிஅம்பலம் மற்றும் முன்னாள் எம்எல்ஏ தோழர் பாலபாரதி மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த மாவட்ட நகரம் ஒன்றிய பொருப்பாளர்களுடன் ஆயிரக்கணக்கான தொண்டர்களும் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.