Published on 03/03/2021 | Edited on 03/03/2021

தமிழகத்தில் 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. அரசியல் கட்சிகளும் கூட்டணி, தொகுதி பங்கீடு, வேட்பாளர் நேர்காணல் என தீவிரமாக இயங்கி வருகின்றன. இந்நிலையில், அதிமுகவுக்கும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்குமான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் அதிமுக - பாஜக கூட்டணியில் தற்போது வரை தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நீடித்து வருகிறது.
அதிமுக - பாஜக இடையே நான்காம் கட்ட தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்றும் முடிவு எட்டப்படாத நிலையில், பாஜக நிர்வாகிகள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி ரவி, தேர்தல் பொறுப்பாளர் வி.கே.சிங் ஆகியோர் சென்னை கமலாலயத்தில் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.