




Published on 16/12/2021 | Edited on 16/12/2021
மத்திய அரசு லாபத்தில் இயங்கி வரும் பொதுத்துறை வங்கிகளை தனியாருக்கு தாரை வார்க்க முடிவு செய்து நடப்பு குளிர்கால கூட்டத் தொடரிலேயே இதற்கான மசோதா நிறைவேற்றப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் வங்கி ஊழியர் சங்கத்தினர் நாடு முழுவதும் 2 நாள் பொது வேலை நிறுத்தம் அறிவித்துள்ளனர். அந்த வகையில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் தமிழ்நாடு வங்கி சங்கங்களின் ஐக்கிய மன்றம் சார்பில் கோஷம் முழக்க போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் வேலை நிறுத்த பேரணியின் போது பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கும் மசோதாவை கைவிடக்கோரி கோஷங்களும் எழுப்பினர்.