அ.தி.மு.க. கட்சியிலிருந்து தனியே பிரிந்து தினகரன் அணி தனிகட்சி தனிக்கொடி அறிவித்து தமிழகம் முழுவதும் கட்சிக்கு உறுப்பினர் சேர்க்கை என்று அ.தி.மு.க. கட்சியினருக்கு சரிக்கு சரியாக மல்லுக்கட்டிக்கொண்டிருக்கும் நிலையில் திருச்சியில் அ.தி.மு.க.வில் இருந்த முக்கிய புள்ளியாக இருந்த சீனிவாசன், மனோகரன், சாருபாலாதொண்டைமான், ராஜசேகரன் என பெரிய பட்டாளமே தினகரன் அணிக்கு சென்றவுடன் அப்போது மா.செ.வாக இருந்த வெல்லமண்டி நடராஜன் தினகரன் அணிக்கு ஈடுகொடுக்க முடியாமல் வயது மூப்பை காரணமாக சொல்ல.. உடனே திருச்சி எம்.பி.குமாரை புதிய மாவட்ட செயலாளராக அறிவித்து அ.தி.மு.க. கட்சிக்கு புதிய உறுப்பினர் சேர்க்கையை வேகப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த நேரத்தில் கூட்டுறவு சங்க தேர்தல் நடைபெற்றுக்கொண்டிருக்கும் நேரத்தில் முக்கிய எதிர்கட்சியான தி.மு.க. கூட இந்த தேர்தலில் அமைதியை கடைபிடித்தது. ஆனால் நீதிமன்ற உத்தரவுக்கு பிறகு தினகரன் அணியினர் அனைத்து கூட்டுறவு சங்கத்திலும் நேரடியாக தேர்தலுக்கு போட்டி போட்டனர். இது பெரிய பரபரப்பை திருச்சியில் ஏற்படுத்திய நிலையில் திருச்சியில் நேற்று முக்கிய வீதிகளில் திவாகரன் என்ன தியாகியா என்கிற பெயரில் பெரிய பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது. இது தினகரன் அணிக்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அதில் சட்டவிரோத பண பரிவர்த்தனை, கா.பி.போசா, அண்ணியசெலவானி மோசடி, தினகரன் தீய சக்தி என்று பேனர் முழுவதும் தினகரன் பற்றி சித்திரகுப்தன் என்கிற பெயரில் அ.தி.மு.க. மாநகர் மாவட்டம் என்று பேனர் வைத்திருந்தது தினகரன் அணியினரை பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பேனர் தகவல் வெளியானவுடன் தினகரன் அணியை சேர்ந்த சீனிவாசன், சாருபாலா, ராஜசேகரன் மனோகரன் ஆகியோர் திருச்சி போக்குவரத்து டிசி மயிவாகணனை சந்தித்து தினகரனை கேலி செய்து சித்திரம் வரைந்து மாநகர் முழுவதும் பேனர்கள், சுவரொட்டிகள், வைத்திருக்கிறார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் கொடுத்திருக்கிறார்கள்.
அரசியல் பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் ஆளும் கட்சியினர் வைத்திருக்கும் பிளக்ஸ் பேனர் பிரச்சனை போலீசுக்கு பெரிய தலைவலியை ஏற்படுத்தி யிருக்கிறது.