Skip to main content

மாற்றப்பட்டதா வாக்குப்பெட்டிகள்... எதிர்க்கட்சிகள் சாலைமறியல்... அதிகாரிகள் சஸ்பெண்ட்?

Published on 10/10/2021 | Edited on 10/10/2021

 

Ballot boxes changed .... Opposition parties blame the ruling party for the road blockade ... Officials suspended?

 

தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டங்களாக அக்டோபர் 6 ஆம் தேதி மற்றும் அக்டோபர் 9 ஆம் தேதி நடைபெற்றன. வாக்குப்பெட்டிகள் பாதுகாப்பாக அந்தந்த ஒன்றியங்களில் வைக்கப்பட்டுப் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வரும் அக்டோபர் 13ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.

 

திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள 6 ஒன்றியங்களில் மூன்று ஒன்றியங்களுக்கான தேர்தல் அக்டோபர் 6ஆம் தேதியும், ஆலங்காயம், மாதனூர் ஒன்றியம் உட்பட 3 ஒன்றியங்களுக்கான தேர்தல் அக்டோபர் 9ஆம் தேதியும் நடைபெற்றன. ஆலங்காயம் ஒன்றியத்தில் 161 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்குப்பெட்டிகள் ஆலங்காயம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கொண்டுவந்து பாதுகாப்பாக வைக்கப்பட்டு அனைத்து அரசியல் கட்சிகளின் தலைமை முகவர்களின் முன்னிலையில் அறைகளுக்குச் சீல் வைக்கப்பட்டது. அதற்கு இரண்டடுக்கு காவல்துறை பாதுகாப்பும், சிசிடிவி கேமரா கண்காணிப்பு பாதுகாப்பும் பலமாக வைக்கப்பட்டிருந்தது. அந்த பள்ளி வளாகத்தில் திமுக, அதிமுக, பாமக உட்பட அனைத்து அரசியல் கட்சிகளின் முகவர்களும் அதிகாரிகளோடு சேர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுப்பட்டிருந்தனர்.

 

அக்டோபர் 10 ஆம் தேதி மதியம் ஆலங்காயத்துக்கு உட்பட்ட வாணியம்பாடி தொகுதி எம்.எல்.ஏவான அதிமுகவை சேர்ந்த செந்தில்குமார், பதிவு செய்யப்பட்ட சிசிடிவி கேமரா பதிவுகளைச் சுட்டிக்காட்டி அதிகாரிகள் எதற்காக அறைக்குள் செல்கிறார்கள், வாக்குப்பெட்டி எதற்கு சம்மந்தம்மில்லாமல் கொண்டு செல்கிறார்கள் எனக்கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு அதிகாரிகள் சரியாக பதில் சொல்லவில்லையாம். அதனைத் தொடர்ந்து அதிமுக, பாமக, பாஜவினர் ஆலங்காயத்தில் அந்த பள்ளி முன் குவிந்து சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.

 

அங்கு வந்த காவல்துறை அதிகாரிகளிடம் ஆளும்கட்சியான திமுகவுக்கு சாதகமாக அதிகாரிகள் வாக்குபெட்டிகளை மாற்றம் செய்துள்ளார்கள் எனக்குற்றம் சாட்டினார்கள் அதிமுக பிரமுகர்கள். அதோடு, வாக்கு எண்ணும் மையத்திலிருந்த நாற்காலிகள் அடித்து உடைக்கப்பட்டன. மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான அமர்குஷ்வாவிடம் புகார்கள் தெரிவித்தனர். மாநில தேர்தல் ஆணையத்துக்கும் புகார்கள் தெரிவித்தனர்.

 

Ballot boxes changed .... Opposition parties blame the ruling party for the road blockade ... Officials suspended?

 

கிரிசமுத்திரம், மிட்டூர், நெக்னாமலை புருஷோத்தமகுப்பம் கிராமங்களில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடி பெட்டிகளில் சீல் வைக்கப்பட்டுக் கட்டப்பட்டிருந்த சிலிப்கள் கீழே கிடந்ததைப் புகைப்படம், வீடியோ எடுத்து மாவட்ட தேர்தல் அதிகாரிக்குப் புகார்கள் தெரிவித்தனர். இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்திவருகின்றனர். தற்போது ஆலங்காயம் ஒன்றிய தேர்தல் அலுவலர்களான உமாமகேஸ்வரி, சிவக்குமார் ஆகிய இரு அதிகாரிகள் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட வேண்டும் எனக் கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


ஜோலார்பேட்டை எம்.எல்.ஏவும், திருப்பத்தூர் மாவட்ட திமுக மாவட்ட பொறுப்பாளருமான தேவராஜ்யின் சொந்தவூர் செக்குமேடு. இது ஆலங்காயம் ஒன்றியத்துக்கு உட்பட்டது. வேட்புமனுதாக்கலின்போதே ஆளும்கட்சியான திமுகவினருக்கு சாதகமாக அதிகாரிகள் நடந்துகொள்ள வேண்டும், நாங்கள் ஆளும்கட்சி, எங்களை பகைச்சிக்காதே என அதிகாரிகளை மிரட்டினார். அவரது உத்தரவின்படித்தான் அதிகாரிகள் பெட்டிகளை மாற்றியுள்ளார்கள். ஆளும்கட்சி அராஜகம் இங்குத் தொடங்கியுள்ளது. வாக்கு எண்ணிக்கை நேர்மையாக நடக்கும் என்கிற நம்பிக்கையில்லை எனக் குற்றம்சாட்டுகிறார்கள் அதிமுக உட்பட எதிர்கட்சியினர்.

 

அதோடு திருப்பத்தூர் மாவட்ட பொறுப்பாளரும், எம்.எல்.ஏவுமான தேவராஜ் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும், அவரது எம்.எல்.ஏ பதவியை சட்டப்படி பறிக்க வேண்டும், அவரை தேர்தலில் போட்டியிடாதபடி தகுதிநீக்கம் செய்ய வேண்டுமென்ற கோரிக்கை சமூக வலைத்தளங்கள் வாயிலாக எழுப்பி வருகின்றனர் எதிர்க்கட்சியினர். இது திருப்பத்தூர் மாவட்டத்தைத் தாண்டியும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

சுட்டுப் பிடிக்கப்பட்ட ரவுடி; லால்குடியில் பரபரப்பு!

Published on 05/07/2024 | Edited on 05/07/2024
A rowdy who was shooted; There is excitement in Lalgudi

பல வழக்குகளில் தொடர்புடைய ரவுடியை போலீசார் சுட்டுப் பிடித்த சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்துள்ள ஆதிக்குடி பகுதியைச் சேர்ந்தவர் கலைப்புலி ராஜா. அந்தப் பகுதியில் சரித்திர பதிவேடு குற்றவாளியாக இருந்த கலைப்புலி ராஜா மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. அந்தப் பகுதியில் ரவுடியாகவும் வலம் வந்தார். கலைப்புலி ராஜா போலவே நவீன்குமார் என்பவரும் சரித்திர பதிவேடு குற்றவாளியாக இருந்துள்ளார்.

கலைப்புலி ராஜா மற்றும் நவீன்குமார் ஆகிய இருவர்களுக்கிடையே யார் பெரியவர் என்ற போட்டியால் அடிக்கடி மோதல் எழுதுவது வழக்கம். இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு ராஜா மற்றும் அவருடைய நண்பர்கள் சேர்ந்து நவீன் குமாரை வெட்டிக் கொலை செய்தனர். இது தொடர்பாக லால்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த ரவுடி கலைப்புலி ராஜாவைத் தேடி வந்தனர்.

இது தொடர்பாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட பொழுது சிறுகனூர் பகுதியில் வீடு ஒன்றில் பதுங்கி இருந்த கலைபுலி ராஜாவை போலீசார் பிடிக்க முயன்றனர். அப்பொழுது பதிலுக்கு ரவுடி கலைப்புலி ராஜா போலீசாரை அரிவாளால் வெட்ட முயன்றதால் தற்காத்துக் கொள்வதற்காக காலில் சுட்டதில் பலத்த காயமடைந்த ராஜா கீழே விழுந்தார். உடனே அவரைப் பிடித்த போலீசார் திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இந்தத் துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக எஸ்.பி வருண்குமார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். பிரபல ரவுடி போலீசாரால் சுட்டு பிடிக்கப்பட்ட சம்பவம் திருச்சி லால்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

11 வயது சிறுமியை அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை; பட்டுக்கோட்டையில் கொடூரம்

Published on 05/07/2024 | Edited on 05/07/2024
11-year-old girl confined at home; Atrocity in pattukottai

தஞ்சாவூரில்  11 வயது சிறுமி  வீட்டில் தனியாக இருந்தபோது மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்த நிலையில், இரண்டு இளைஞர்கள் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் 11 வயது சிறுமி வீட்டில் தனியாக இருந்ததைப் பயன்படுத்தி அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக மேற்கொண்ட விசாரணையில் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட பாரதி, மதியழகன் என்ற இரண்டு இளைஞர்களை போலீசார் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

முன்னதாக இந்த சம்பவம் தொடர்பாக புகாரளித்தும் முறையாக விசாரணை மேற்கொள்ளப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. அதனடிப்படையில் பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய தலைமைக் காவலர் சரளா ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட  விசாரணையில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  மேலும் இதில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தொடர்ந்து வருகின்றனர். பட்டுக்கோட்டையில் 11 வயது சிறுமி அடைத்து வைக்கப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.