புதுவண்ணாரப்பேட்டை சுனாமி குடியிருப்பில் முப்பதுக்கும் மேற்பட்ட திருநங்கைகள் வசித்து வருகிறார்கள். திருநங்கைகள் மூலம் பல குற்றச்செயல்களை தடுக்கும் வகையில் இணை ஆணையர் பாலகிருஷ்ணன் திருநங்கைகள் அனைவரையும் அழைத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினார்.
இந்த விழிப்புணர்வு மூலமாக சுனாமி குடியிருப்பில் குற்றச்செயல்கள் குறைவதற்கு நாங்கள் சில முக்கிய நடவடிக்கைகள் எடுத்துவருகிறோம். இதில் உங்களுடைய பங்கும் எங்களுக்கு தேவைப்படுகிறது. குற்றச்செயல்கள் போன்ற எந்த தவறையும் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அதேபோல உங்களுக்கு எந்த உதவி என்றாலும் எந்த நேரத்திலும் என்னை அழைக்கலாம். உங்களுக்கு உதவும் நாங்கள் தயாராக இருக்கிறோம். என்று தெரிவித்தார். மேலும் இந்த நிகழ்வில் கலந்துக்கொண்ட அனைவருக்கும் புடவை, மளிகை பொருட்கள் ஆகியவற்றை வழங்கி சிறப்பித்தனர்.
அப்போது துணை ஆணையர் சுப்புலட்சுமி, திருவொற்றியூர் உதவி ஆணையர் ஆனந்தகுமார் மற்றும் ஆய்வாளர் கோவிந்தராஜன் குற்றப்பிரிவு ஆய்வாளர் புவனேஸ்வரி திருவொற்றியூர் ஆய்வாளர் ஆரோக்கியராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.