Skip to main content

எட்டு ஒன்றியத்தோடு மாவட்டத்தையும் கைப்பற்றி கெத்து காட்டிய திமுக... துவண்டுபோன அதிமுக...!

Published on 11/01/2020 | Edited on 11/01/2020

நாகை மாவட்டத்தில் நடைபெற்ற மாவட்ட மற்றும் ஒன்றிய குழு தலைவருக்கான மறைமுக தேர்தலில் திமுகவே அதிகமான இடங்களை பிடித்து வெற்றிபெற்றுள்ளது. கடந்த 27 மற்றும் 30ஆம் தேதிகளில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்ற மாவட்ட மற்றும் ஒன்றிய கவுன்சிலர்களில் தலைவரை தேர்வு செய்யும் மறைமுகத் தேர்தல் நடைபெற்றது. 

 

local body election-Nagapattinam-dmk-admk

 



நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மாவட்ட குழுத்தலைவருக்கான மறைமுக தேர்தலில் வெற்றிபெற்ற 21 வேட்பாளர்களில் திமுக மற்றும் அதிமுக கவுன்சிலர்களில் 20 பேர் மட்டும் கலந்து கொண்டு வாக்களித்தனர். இதில் 11வது வார்டில் போட்டியிட்டு வெற்றிபெற்ற திமுக கவுன்சிலர் உமாமகேஸ்வரி என்பவர் 13 வாக்குகளும், 8 வது வார்டு திமுக கவுன்சிலர் வெண்ணிலா என்பவர் 7 வாக்குகளும் பெற்றனர். இதில் நாகை மாவட்ட குழுத்தலைவராக  13 வாக்குகளை பெற்ற உமாமகேஸ்வரியை அறிவித்தனர்.

நாகை மாவட்டத்தில் உள்ள 11 ஒன்றியங்களில் மறைமுகத் தேர்தல் அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் நடைபெற்றது. அவற்றின் வெற்றி விவரங்கள் பின்வறுமாறு... 

திமுக வெற்றி விவரங்கள்: 

நாகை ஒன்றிய குழு தலைவராக திமுகவைச் சேர்ந்த அனுசுயா என்பவர் 8 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

இதைப்போல் கீழ்வேளூர் ஒன்றியத்தில் திமுகவைச்சேர்ந்த வாசுகி என்பவர் 7 வாக்குகள் பெற்று ஒன்றிய குழு தலைவராக வெற்றி பெற்றார்.

கீழையூர் ஒன்றியத்தில் திமுகவைச் சேர்ந்த செல்வராணி என்பவர் 7 வாக்குகள் பெற்று ஒன்றிய குழு தலைவராக வெற்றி பெற்றார்.

சீர்காழி ஒன்றியத்தில் 21 திமுகவை சேர்ந்த கமலஜோதி என்பவர் 11 வாக்குகள் பெற்று ஒன்றிய குழு தலைவராக வெற்றி பெற்றார்.

செம்பனார்கோவில் ஊராட்சியில் திமுகவைச் சேர்ந்த நந்தினி என்பவர் 21 வாக்குகள் பெற்று ஒன்றியக் குழுத் தலைவராக அபார வெற்றி பெற்றார். 

தலைஞாயிறு ஒன்றியத்தில் திமுகவைச் சேர்ந்த தமிழரசி என்பவர் 7 வாக்குகள் பெற்று ஒன்றியக் குழுத் தலைவராக வெற்றி பெற்றார்.

கொள்ளிடம் ஊராட்சியில் திமுகவைச் சேர்ந்த ஜெயப்பிரகாசம் என்பவர் 13 வாக்குகள் பெற்று ஒன்றியக் குழுத் தலைவராக வெற்றி பெற்றார்.

மயிலாடுதுறை ஒன்றியத்தில் திமுகவை சேர்ந்த காமாட்சி மூர்த்தி என்பவர் 14 வாக்குகள் பெற்று ஒன்றிய குழு தலைவராக வெற்றி பெற்றார். 

 

 

அதிமுக வெற்றி விபரங்கள்: 

வேதாரண்யம் ஒன்றியத்தில் 25 கவுன்சிலர்கள் வெற்றி பெற்றனர். இதில் அதிமுகவைச் சேர்ந்த கமலா என்பவர் ஒன்றிய குழு தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டு வெற்றி பெற்றார்.

திருமருகல் ஒன்றியத்தில்  அதிமுகவை சேர்ந்த இராதாகிருட்டினன் 10 வாக்குகள் பெற்று ஒன்றிய குழு தலைவராக வெற்றி பெற்றார்.

குத்தாலம் ஒன்றியத்தில் அதிமுகவைச் சேர்ந்த மகேந்திரன் என்பவர் 13 வாக்குகள் பெற்று ஒன்றிய குழுத் தலைவராக வெற்றி பெற்றார்.

சார்ந்த செய்திகள்