தென்கிழக்கு வங்கக்கடலில் 'அசானி' புயல் உருவாகி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் இது தீவிர புயலாக மாறி வடமேற்கு திசையில் நகரக் கூடும் என கணித்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், இதனால் வங்கக்கடலில் வரும் 12 மணி நேரத்தில் 'அசானி' தீவிர புயலாக வலுப்பெற்று ஆந்திரா ஒடிசா கடற்கரையை நோக்கி நகரும் என்பதால் தென்கிழக்கு வங்கக்கடல் அதனை ஒட்டிய மத்திய வங்கக் கடல் பகுதிக்கு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது.
அதேபோல் தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கோவையில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. இன்றும் நாளையும் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.