Published on 25/01/2021 | Edited on 25/01/2021

அண்ணா நினைவு நாளான பிப்ரவரி 3-ஆம் தேதி அண்ணா நினைவிடம் நோக்கிப் பேரணி நடைபெறும் என்று சென்னை மாவட்ட தி.மு.க. அறிவித்துள்ளது.
சென்னை மாவட்ட தி.மு.க. வெளியிட்டுள்ள அறிக்கையில், 'பேரறிஞர் அண்ணாவின் 52-வது நினைவு நாளையொட்டி தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு மற்றும் கழக முன்னணியினர், பிப்ரவரி 3, புதன்கிழமை காலை 07.00 மணிக்கு காமராஜர் சாலையில் அமைந்துள்ள அண்ணா நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்துவர்.
இந்த அமைதிப் பேரணி வாலாஜா சாலையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகை அருகிலிருந்து புறப்பட்டு அண்ணா சதுக்கத்தை சென்றடையும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.