விவேகம் படத்தை அடுத்து விஸ்வரூபம் படத்தையும் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்தது. இதில், விவேகம் பட விநியோக உரிமை மோசடியில் தயாரிப்பாளர் மீது வழக்குபதிவு செய்ய நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.

அஜீத்குமார் நடித்த விவேகம் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தியாகராஜன் தயாரித்திருந்தார். இப்படத்தின் வெளிநாட்டு விநியோக உரிமை வழங்கியதில் மோசடி செய்ததாக, அதாவது மலேசியாவில் விவேகம் படத்தை திரையிட 4.25 கோடி ரூபாய் தங்களிடம் பெற்றுக்கொண்டு வேறு நிறுவனத்திற்கு உரிமையை வழங்கி விட்டதாக குற்றச்சாட்டு கூறி, மலேசிய டி.எஸ்.ஆர். நிறுவனம் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் புகார் மனு அளித்தது. கடந்த 2017ம் ஆண்டில் இது குறித்து சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்தும், அந்தப்புகாரின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

இம்மனுவை விசாரித்த நிதிமன்றம், புகார் மனுவில் முகாந்திரம் இருப்பதால், தியாகராஜன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு உத்தரவிட்டுள்ளது.