Skip to main content

 கலப்புத் திருமணம் செய்தவர்களுக்கு விவசாய மின் இணைப்பு உடனடி...  மின்வாரிய சலுகை!

Published on 12/07/2018 | Edited on 12/07/2018
lo


விவசாயம், மற்றும் அவை சார்ந்த சார்புத் தொழில்களுக்கு மின் இணைப்புக் கேட்டு பலர் காத்திருக்கின்றனர். நடையாய் நடந்து கால்களும் தேய்ந்து ஓய்ந்து விடுகிறார்கள். அதே போன்று தான் வீடு சார்ந்தவைகளுக்கு மின் இணைப்புக் கேட்டு விண்ணப்பித்த 24 மணி நேரத்திற்குள் மின் இணைப்புத் தரவேண்டும். இது போன்றவைகள் தற்போது கானல் நீராகவே மாறிக் கொண்டிருக்கிறன்றன. மாறாக மின்சாரம் அன்றி வாழ்க்கை இல்லை என்ற சூழல் உருவாகிக் கொண்டிருக்கும் நேரத்தில் கலப்புத் திருமணம் செய்தவர்கள் தங்களுக்கான விவசாய மின் இணைப்புக் கேட்டு விண்ணப்பம் செய்தால் உடனடியாக முன்னுரிமை தரப்பட்டு மின் இணைப்பு வழங்கப்படுகிற வசதியினை மின்வாரியம் தற்போது நடை முறைப்படுத்தியிருக்கிறது.

 

அதற்குத் தேவையான சில ஆவணங்களையும் குறிப்பிட்டிருக்கிறது மின்வாரியம்.

 

கலப்புத் திருமணம் செய்து கொண்டதற்கான பதிவு செய்யப்பட்ட ஆவணங்கள் மற்றும் இருவரின் சாதிச் சான்றிதழ்களுக்கான சம்பந்தப்பட்ட வட்டாட்சியரிடமிருந்து பெற்ற சான்று ஆவணங்கள் மற்றும் நிலத்தில் இருந்து வருகிற வருவாயைக் கொண்டே வாழ்க்கை நடத்துபவர்கள், பொருளாதாரத்தில் பின் தங்கியவர் என்று சம்பந்தப்பட்ட தாலுகா வட்டாட்சியரிடமிருந்து சான்று பெற வேண்டும். அடுத்து விவசாய விண்ணப்பம், அதோடு கிராம நிர்வாக அலுவலர் சான்று, வரை படம், அரசு பட்டா அல்லது பத்திரம், சிட்டா, அடங்கல், தடையில்லாச் சான்று இவைகளோடு மேற்பார்வைப் பொறியாளர் ஊரக மின்மயமாக்கல் மேம்பாடு மற்றும் பகிர்மானம், அலுவலகத்தில், பதிவு செய்த சான்று ஆகியவைகள் இணைக்கப்பட வேண்டும்.

 

இவைகளனைத்தையும் கொண்ட ஆவணங்களோடு உரிய மாவட்ட மின்வாரிய கண்காணிப்பு பொறியாளரிடம் சமர்ப்பித்து உடனடியாக மின் இணைப்ப பெற வேண்டியும் சொல்லப்பட்டுள்ளது.

 

இது பெடர்பாக நாம் மின் வாரியத்தின் பகிர்மான அதிகாரிகள் வட்டாரத்தில் பேசியதில், இது போன்ற திட்டங்கள் வெளியே அறியப்படாமலிருந்தன. தற்போது மக்களின் நலன் பொருட்டு முன்னெடுக்கப்படுகிறது என்கிறார்கள்.

 
 

சார்ந்த செய்திகள்

 

Next Story

காதல் தோல்வி; இளைஞர் எடுத்த விபரீத முடிவு!

Published on 04/05/2024 | Edited on 04/05/2024
young man lost his life due to love failure

திருச்சி தென்னூர் அண்டகொண்டான் பகுதியைச் சேர்ந்தவர் விஸ்வநாதன் (வயது 27). இவர் தனியார் செல்போன் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் விஸ்வநாதன் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அந்த பெண்ணின் பெற்றோர் விஸ்வநாதனுக்கு திருமணம் செய்து கொடுக்க மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக மன உளைச்சலில் காணப்பட்ட விஸ்வநாதன் நேற்று வீட்டின் அருகில் உள்ள தென்னூர் மீனாட்சி அம்மன் தோப்பில் கொட்டகையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

இதனை பார்த்த அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் உடனடியாக தில்லைநகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த தில்லைநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தூக்கில் பிணமாக தொங்கிய விஸ்வநாதன் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து தில்லைநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

வீட்டை விட்டு வெளியேறிய காதல் ஜோடி; தாயைக் கம்பத்தில் கட்டி வைத்து தாக்கிய கொடூரம்!

Published on 04/05/2024 | Edited on 04/05/2024
tied the mother to a pole as the romantic couple left the house

கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டம் அரேமல்லாபுர கிராமத்தைச் சேர்ந்தவர் அனுமவ்வா. இவரது மகன் மஞ்சுநாத். இருவரும் தனியாக வசித்து வரும் நிலையில் மகன் மஞ்சுநாத் அதே கிராமத்தில் வசிக்கும் வேறு ஒரு சமூகத்தைச் சேர்ந்த பெண்ணைக் காதலித்து வந்துள்ளார். இவர்களின் காதலுக்கு பெண் வீட்டார் தரப்பிலிருந்து எதிர்ப்பு கிளம்பியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் மஞ்சுநாத்தும் அந்தப் பெண்ணும் வீட்டை விட்டு வெளியேறி உள்ளனர். இந்தத் தகவல் பெண்ணின் தந்தை சந்திரப்பாவுக்கு தெரிய வர உடனடியாக தனது உறவினர்களுடன் அனுமவ்வாவின் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு தகராறில் ஈடுபட்ட சந்திரப்பா அனுமவ்வா வை பிடித்து சரமாரியாக தாக்கியுள்ளார். பின்பு அங்குள்ள மின்கம்பத்தில் அனுமவ்வாவைக் கட்டி வைத்து சந்திரப்பா மற்றும் அவரது உறவினர்கள் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து அப்பகுதிமக்கள் அனுமவ்வாவை மீட்டு  மருத்துவமனையில் சிசிச்சைக்காக அனுமதித்தனர். இதையடுத்து அனுமவ்வா குடுபத்தார் சந்திரப்பா மீது புகார் கொடுக்க, பதிலுக்கு தன் மகளை மஞ்சுநாத் கடத்தியதாக சந்திரப்பாவும் புகார் கொடுத்துள்ளார். இந்த இரு புகார்களை பதிவு செய்துகொண்ட போலீசார், தனித்தனியே விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடயே, அனுமவ்வா மின் கம்பத்தில் கட்டிவைத்து தாக்கப்பட்ட சம்பவம் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து அனுமவ்வாவை மின்கம்பத்தில் கட்டி வைத்து தாக்கியவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட எஸ்பி அஞ்சுக்குமார் உத்தரவு பிரபித்தார். அதன்பேரில் சந்திரப்பா  மற்றும் அவரது உறவினர்கள் மூன்று பேரையும் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.