Published on 15/03/2018 | Edited on 15/03/2018

இன்று ஸ்ரீவில்லிபுத்தூர் வந்த புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்தபோது,
“காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு காலம் தாழ்த்தலாமே தவிர, அதை தவிர்க்க முடியாது. தமிழகத்தின் உரிமை இது. நிலை நாட்டியே தீர வேண்டும். இந்த அரசு இல்லையென்றாலும், எந்த அரசு வந்தாலும் தப்பிக்கவே முடியாது. தமிழகத்தில் தினமும் ஒரு கட்சி முளைத்துக்கொண்டிருக்கிறது.
ஒரு படத்தில் தலை காட்டிய நடிகர்கள், அரை படத்தில், கால் படத்தில் உதவி இயக்குநராக இருந்தவர்கள், உதவிக்கு உதவியாக இருந்தவர்களெல்லாம் அரசியலுக்கு வந்துவிட்டார்கள். தியேட்டர்களை மூடியதால், படங்கள் வெளிவரவில்லை. அதனால், படப்பிடிப்பு துவங்க முடியவில்லை. பல நடிகர்களுக்கு வேலை இருக்காது என்று கருதுகிறேன். இன்னும் நிறைய பேரை எதிர்பார்க்கிறேன்.